மாற்றுத் திறனாளி மரணம் – முதலமைச்சர் நடவடிக்கைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம், கருப்பூரில் வசித்து வரும் மாற்றுத் திறனாளி ஏ. பிரபாகரனும், அவரது மனைவியும், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சித்தரவதை செய்ததில் மாற்றுத் திறனாளி ஏ.பிரபாகரன் உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வேண்டுகோள் விடுத்தன.
இதனைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளி ஏ.பிரபாகரன் மரணம் குறித்த வழக்கு விசாரணையை காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றியும், பிரபாகரன் குடும்பத்தின் மறுவாழ்வுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் வழங்கவும் மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. நன்றி தெரிவித்து கொள்கிறது.
மனித உரிமைகள் பேணுவதில் முதலமைச்சர் காட்டும் அக்கறையை காவல்துறை உணரும் என நம்புகிறோம்.