கட்டுரைகள்

மன்னிப்புக்கு மன்னிப்பு உண்டா?

வீ.தர்மதாஸ்

பிதாவே இவர்களை மன்னியும், இவர்கள் செய்வது என்ன வென்று தெரியாமல் செய்கிறார்கள். பிதாவைப்பார்த்து கர்த்தராகிய இயேசு கிருஸ்து மன்னிப்பு கேட்டதை பைபுல் விளக்குகிறது.
இந்த உலகத்திலேயே மன்னிப்பதில் மகத்தானவர்; அல்லாஹ் ஒருவர்தான் மனிதர்களும் மன்னிக்க தகுதியுள்ளவர்களே (5352இது குரான் வாசகம்)
மன்னிக்க மறுப்பவன் கவர்க்கம் போகமுடியாது. இந்த பூமியில் அவன் ஆண்மிக ஏழையாகத்தான் வாழ முடியும் என்று பகவத் கீதை மன்னிப்பு பற்றி கூறுகிறது.
மனிதனுக்கு மன்னிக்கும் உணர்ச்சி மட்டும் மேலோங்கி இருந்தால் இந்த உலகத்தில் ஒரு கொலை கூட நடக்காது. இது அன்னை தெரசாவின் அமுதமொழி.
மன்னிப்பு கேட்பது என்பது மனிதனின் மகத்தான பண்புகளில் ஒன்று என்று காலம் காலமாய் இதிகாசங்களிலும் இலக்கியங்களிலும், புராணங்களிலும் சொல்லப்பட்டு வந்துகொண்டேயுள்ளது. யார் யாரிடம் மன்னிப்பு கேட்டது, ஏன் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதான் இன்றுள்ள தலையாய பிச்சனை நாட்டை தவறாக வழிநடத்தி மக்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்காக முன்னால் பிரதமர் இந்திராகாந்தி மேடையில் கண்ணீர்விட்டு அழுது மக்களிடம் மன்னிப்பு கேட்டார். அவசரநிலை பிரகடனத்தால் ஆரம்பத்தில் பல நன்மைகள் எற்பட்டாலும் இறுதியில் தீமையே மிஞ்சியதை அறிந்து மன்னிப்பு கேட்டார் அதனால்; மக்கள் மன்னித்து அவரை மீண்டும் 14.01.1980-ல் பிரதமர் ஆக்கினார்கள் 2014-ல் ஆட்சிக் கட்டிலில் ஏறிய மோடி 08.11.2016-ல் கறுப்புப் பணத்தை கண்டுப்பிடித்து கட்டுகட்டாக மக்களிடம் ஒப்படைப்பேன் என்று சொல்லி ரூ 500, 1000, செல்லாது என்று அதிரடியாக அறிவித்து, மக்கள்தன் சொந்தப்பணத்தை, உழைத்தப் பணத்தை எடுக்கமுடியாமல் நடுத்தெருவில் கால்கடுக்க நிறுத்தினார். வெயிலில், மழையில் சுருண்டுவிழுந்து செத்தவர்கள் 68பேர் என்று அறிவித்தார்கள். மோடியின் கல்நெஞ்சம் இளகியதா? பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் காஷ்மீரில் துப்பாக்கி சத்தம் நின்றுவிட்டது. தீவரவாதிகள் பணம் இல்லாமல் பதுங்கிவிட்டார்கள். என்ற பரணி பாடினார்.
ஜால்ரா மன்னன் அமித்ஷாவோ உள்நாட்டு பயங்கரவாதம் ஓய்ந்துவிட்டது. நக்சல்கள் நடமாட்டம் இல்லாமல் நடுநடுங்கி போய்விட்டார்கள் என்று வீரவசனம் பேசினார். நூறு நாளில் நிலைமை சரியாகிவிடும் என்று மோடி வானொலி, தொலைக்காட்யில் மன்கிபாத்தில் ராகம் பாடினார். இது தவறான பொருளாதார நடவடிக்கை என்று பொருளாதார நிபுணர்கள் சொன்னதையும் மோடி பொருட்படுத்தவில்லை. இதனால் மக்களுக்கு ஏற்;பட்ட உயிர் இழப்புக்கு மன்னிப்பு கேட்டாரா? இல்லவே இல்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை, புல்வாமா தாக்குதல் மூலம் யுத்தி உணர்வை தூண்டியும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவேன் என்று மத உணர்வை தூண்டிவிட்டும், உயர்ஜாதி வகுப்பினருக்கு10மூ இட ஒதுக்கிடு அறிவித்தும் 1919-ல் மீண்டும் ஆட்சியை மோடிபிடித்து, தனது மிருக பலத்தால் காஷ்மீரை உடைத்து, அரசியல் சட்டத்தை சிதைத்து, குடியுரிமை சட்டத்தை திருத்தி, ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டி நவம்பர் 26-ல் வேளாண் சட்டங்கள் மூன்றை அறிமுகப்படுத்தி எதிர்க்க ஆள் இல்லை என்று எகத்தாளமாய் கொக்கரித்தார்;. ஆனால் அவர் கொட்டத்தையும், கொக்கரிப்பையும் அடக்க சிங்கமொன சீறி எழுந்தனர் சிந்துநதி மக்கள். வேளாண் சட்டங்கள் அறிமுகப்படுத்தி மக்களை எமாற்ற அவர் சொன்ன அடுக்கடுக்கான பொய்களும், பித்தலாட்டங்களும்.இதோ.
டெல்லிக்கு வரும் சாலைகளை விவசாயிகள் அடைத்து தர்ணா செய்வதால் குரோனா இவர்கள் மூலம் பரவப்போகிறது.
விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் தீவிரவாதிகள் குறிப்பாக பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்துவிட்டனர்.
போராடுவது விவசாயிகளே இல்லை, இவர்கள் எல்லோரும் இடைத்தரகர்கள.;
இந்த வேளாண் சட்டங்களை பஞ்சாப் விவசாயிகள் தவிர மற்ற மாநில விவசாயிகள் மனதார வரவேற்கிறார்கள்.
எதிர் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்காக விவசாயிகளை தூண்டுவிடுகிறார்கள்.
இந்த வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும்
போராட்டம் நடத்துபவர்கள் வன்முறை மூலம் (தர்ணா வன்முறையாம்)அரசை பணியவைக்க முயற்சிக்கிறார்கள்.
போராட்டம் நடத்துபவர்களுக்கு அன்னிய நாட்டின் நிதி உதவி திவீரவாதிகள் மூலம் கிடைத்துவருகிறது.
குடியரசு தினத்தன்று டிராக்டர் ஊர்வலம் விட்டு செங்கோட்டையில் காலிஸ்தானின்;; கொடியேற்றி விட்டார்கள்.
சொந்த நாட்டின் பாராளுமன்றங்களை விட்டு அன்னிய நாட்டின் பாராளுமன்றங்கள் மூலம் தங்கள் கோரிக்கைகளை பேச வைத்து தேச விரோத செயல் செய்கிறார்கள்.
இப்படி தொடர்ந்து கோயாபல்ஸ் பிரச்சாரம் செய்த மோடி நினைத்தது என்ன? மிஞ்சி மிஞ்சிப்போனால் மூன்று மாத காலம் போராடுவார்கள். அப்புறம்; அவர்களாகவே பிரிந்து சண்டைப்போட்டுக்கொண்டு இடத்தை காலி செய்வார்கள் என்று எதிர்பார்த்தார்;. முள்வேலியைப்போட்டு தண்ணீர் பீச்சியடித்து ஒடச்செய்தார்கள்.ஆனால் விவசாயிகளின் உருக்குலையா உறுதி, ஒற்றுமை, பல்வேறு மாநிலங்களில் கிடைத்த ஆதரவு மோடியை சிந்திக்க வைத்தது. உச்சநீதிமன்றம் மூலமாக அவர்களை வெளியேற்றும் முயற்சியாக ஒன்றரை ஆண்டுக்காலம் சட்டங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தும் விவசாயிகள் அசையவில்லை. இராணுவத்தை பிரயோகப்படுத்தியும் இவர்களை விரட்டமுடியாது. மோடிக்கு யார் மீது உண்மையான கோபம் என்றால் அமித் ஷா-மீது தான் “சும்மா இருந்த சங்கை ஊதிக்கொடுத்தானம் ஆண்டி”என்பதைப்போல அமித்ஷா”வரும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பி.ஜே.பியின் சாதனைகளுக்கு மக்கள் வெற்றிப்பரிசு அளிப்பார்கள்”.என்று பேசிவிட்டார்;. 30.10.2021 நடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் பி.ஜே.பி படுதோல்வி அடைந்துவிட்டது. ஆளும் கட்சியாக பி.ஜே.பி இருக்கும் ஹிமாசலப்பிரதேசத்தில் மண்டி மக்களவைத்தொகுதியில் பி.ஜே.பி; மண்ணை கவ்வியது.அந்த நிலையில் அமித்ஷா வரும் சட்டமன்ற தேர்தலில் உத்திரபிரதேசத்தில் பி.ஜே.பி வெற்றிப்பெற்றால்தான் 2024ல் மோடி பிரதமராக முடியும் என்ற அபாய சங்கை ஊதினார். ஆனால் மோடிக்கு துயரக்காண்டம் தொடங்கிவைக்க யோகி ஆதித்யா உருவில் சனிபகவான் வந்தான். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு வேளாண் சட்டங்கள் திரும்ப பெற வேண்டும் என்று அமைதியாகி ஊர்வலம்போன உத்திரபிரதேச விவசாயிகளை லக்கீம்ப10ர்கேரி இடத்தில் காரை ஏற்றி கொன்றுபோட்டான் மத்திய மந்திரியின் மகன் அமித் மிஸ்ரா. நான்கு விவசாயிகளையும் ஒரு பத்திரிக்கையாளரும் கொல்லப்பட்டார்கள்.இந்த படுக்கொலையை மோடி கண்டித்தாரா? இறந்தவர்களுக்கு அனுதாப செய்தியை சொன்னாரா? இல்லவே இல்லை.சிங்கூர்,டிகிரி,காஜிப்ப10ர், என்று டெல்லியின் எல்லையில் போராடும் விவசாயிகளின் போராட்டம் என்று முடியும் என்று இந்திய மக்கள் மட்டும் அல்ல உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது .விவசாயிகள் தெளிவாக இருந்தார்கள்2024 ல் மோடியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாங்கள் போராட்டத்தை முடித்துவிட்டு எங்கள் வீட்டுக்கு திரும்பிவிடுகிறோம் என்று 64 விவசாயிகளின் சங்கங்கள் ஒரே குரலில் சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற தலைமையில் அறிவித்துவிட்டனர்.தேர்தலில் எப்படி ஜாலவித்தைகள் காட்டி வெற்றி பெறுவது என்ற சிந்தனையைத்தவிர வேறு எதுவும் இல்லாத மோடி வரப்போகும் பஞ்சாப், உ.பி,சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து நவம்பர் 19 அன்று திடிரென்று 3 வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறுவதாய் அறிவித்தார். குருநானக் பிறந்த நாளில் அவருக்கு ஞான ஒளி கிடைத்ததாம். ஞான ஒளி கிடைத்தவுடன் ஒரு மன்னிப்பு கேட்டார் பாருங்கள்.அடேயப்பாக் இப்படிப்பட்ட மன்னிப்பை யாரும் உலகில் இதுவரை கேட்டு இருக்கமாட்டார்கள். ஒராண்டுகாலம் போராடிய விவசாயிகளுக்கு என்னுடைய அருமையான, திடமான இந்த வேளாண் சட்டங்களின் நன்மைகள் புரியவைக்க முடியாமல் நான் தோற்று போனதற்கு நாட்டு மக்களே க் என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கேட்டார். 704 விவசாயிகள் தங்கள் இன்னுயிரை இழக்க காரணமான மோடி அதற்கு நான் தான் காரணம் என்று மன்னிப்பு கேட்கவில்லை. உள்ளங்கை நெல்லிக்கனியாக, கள்ள உள்ளத்தோடு கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை அடகுவைக்கும் மோடியின் வஞ்சக செயலை முறியடித்து மூன்று வேளாண் சட்டங்களை பாராளுமன்ற குப்பைத்தொட்டிக்கு போகவைத்த வீரமிகு விவசாயிகளை வாழ்த்தும் நேரத்தில் மோடியின் போலி மன்னிப்பை மன்னிக்காத வீர மறவர்களை வாழ்த்துவோம்.
தொடர்புக்கு: 9487170984

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button