மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களை 6 மாதத்தில் மூட உத்தரவு
சென்னை, பிப். 4 – தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளுடன் இணைந்த அனைத்து குடிப்பகங்களையும் (பார்) ஆறு மாதங்களில் மூட சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை நீதிபதி சரவணன் விசாரித்தார். இதன்பின் பிறப்பித்த உத்தரவில், டாஸ்மாக் நிர்வாகம் நேரடி அல்லது மறைமுகமாக பார்களை நடத்தவும், டாஸ்மாக் கடைகள் அருகில் தனி நபர்கள் பார்களை நடத்தவும், டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்படும் பார்களில் மது அருந்த வும் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் அனுமதிக்கவில்லை என்று தெரி வித்தார். பார்களுக்கு உரிமம் வழங்கும் அதிகாரம் கலால் வரித்துறை ஆணையருக்கு மட்டுமே உள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்திற்கு இல்லை. டாஸ்மாக் கடைகளுக்கு இடத்தை குத்தகைக்கு வழங்குபவர்கள், அருகில் உள்ள இடத்தை மேம்படுத்தி பார் அமைக்கும் நடைமுறையை அனு மதிக்க முடியாது என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மது வேண்டாம் என்பதையே திருக்குறளும், மகாத்மா காந்தியும் வலியுறுத்தியுள்ளனர். ஆகவே, ஆறு மாதங்களில் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்துள்ள அனைத்து ஃபார்க ளையும் மூட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்திற்கு நீதிபதி உத்தர விட்டார். பார் உரிமம் கோரி தாக்கல் செய்திருந்த அனைத்து மனுக்களை யும் தள்ளுபடி செய்தார்.