இந்தியா

மதம், சாதி, மொழி அடிப்படையில் வாக்குரிமையை பறிக்கத் திட்டம்?

புதுதில்லி, டிச.21- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப் பையும் மீறி, ஒன்றிய பாஜக தேர்தல் சட்டத் திருத்த மசோதாவை (The Election Laws (Amendment) Bill 2021) மக்களவையில் நிறைவேற்றி யுள்ளது. இந்த சட்டத் திருத்தங்களின் மூலம் இனிமேல், “18 வயது நிரம்பி யவர்கள் தங்களை வாக்காளர் களாக பதிவு செய்து கொள்வதற்கு, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக் டோபர் 1 என ஓராண்டில் நான்கு முறை வாய்ப்புகள் வழங்கப்படும்.

பாதுகாப்புப் பணியில் இருக்கும் கணவரால் சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க முடியாத சூழலில், வீர ருக்கு பதிலாக அவரின் இணையர் சர்வீஸ் வாக்கைச் செலுத்தலாம் என்று ஏற்கெனவே சட்டம் உள்ளது. தற்போது, பெண் வீரர் இதுபோன்று பணியில் இருக்கும்போது, சர்வீஸ் வாக்கை அவரின் கணவர் அளிக்க லாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், பாலினச் சமத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வாக்காளர் அட்டையில் உள்ள மனைவி (Wife) என்ற வார்த்தைக்குப் பதிலாக, இணையர் (Spouse) என்ற வார்த்தை இனி பயன்படுத்தப்படும்” என்றெல்லாம் மசோதாவில் குறிப்பி டப்பட்டு உள்ளன. ஆனால், இவை எல்லாவற்றை யும் விட வாக்காளர் அடையாள அட்டையுடன் (Voter ID) ஆதார் அட்டையை (Aadhaar Card) இணைப்பதற்கான முக்கியமான சட்டத் திருத்தம், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது.

“ஒரே நபர் பல இடங்களில் வாக் காளர்களாக இருப்பதை தடுப்ப தற்கே ஆதார் இணைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், வாக்கா ளர்கள் விரும்பினால் மட்டுமே ஆதார் இணைத்துக் கொள்ளப் படும்” என்று ஒன்றிய அரசின் சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியிருந்தாலும், “வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பட்சத்தில் தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் வாக்கு களை நீக்கி விட்டு, தங்களுக்கு வாக்களிப்பவர்களை மட்டுமே ஒன்றிய அரசு வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இருக்கி றது” என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் 2014-ஆம் ஆண்டே ஆந்திரா மாநிலம் நிஜாமாபாத், தெலுங்கானா மாநி லம் ஹைதராபாத் மாவட்டங்களில் மாதிரித் திட்டமாகத் தொடங்கப் பட்டது. எனினும் இதற்குப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, ஆதார் விவரங்களைச் சமூக நலத் திட்டங்கள் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று தீர்ப்ப ளித்தது.

2015-ஆம் ஆண்டில் ஆதார் விவ ரங்களை வாக்காளர் அடையாள அட்டையோடு இணைக்கும் திட் டத்தைச் செயல்படுத்த ஒன்றிய அரசு முயற்சித்தபோதும், அதே உச்ச நீதி மன்ற அமர்வு, அதற்குத் தடை விதித்தது. இதன்காரணமாக, தெலுங் கானாவில் ஆதாருடன் இணைக்கப் பட்ட 40 லட்சம் வாக்காளர்களின் பெயர்களையும், ஆந்திராவில் இணைக் கப்பட்ட 25 லட்சம் வாக்காளர் களின் பெயர்களை நீக்க வேண்டி யதானது. இவை அனைத்தும் வாக் காளர்களுக்குத் தெரியாமலேயே நடந்தது. இதனால் 2018 தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலில், சுமார் 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆதாருடன் இணைக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் தெலுங்கு தேசம் கட் சிக்கு கசிந்ததாக ஒரு குற்றச்சாட்டும் 2019 ஆந்திரா பொதுத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரசால் எழுப்பப் பட்டது.

2011-ஆம் ஆண்டு இத்திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஐந்து கோடி பேரின் வாக்குரிமை பறிபோகும் என கண்டறியப்பட்டது. வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவ ரங்கள் இணைக்கப்படும் பட்சத்தில், ஒருவரின் மதம், சாதி, மொழி ஆகிய வற்றின் அடிப்படையில் அவர்களின் வாக்குரிமையை பறிக்கப்படும் அபா யம் இருப்பதாகவும் விவாதங்கள் முன்னுக்கு வந்தன. இவ்வளவுக்கும் பிறகுதான், தற்போது வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரங்களை இணைப்ப தற்கு மோடி அரசு திங்களன்று நாடா ளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, அதனை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது. ‘‘உச்சநீதிமன்றத்தின் உத்தர வுக்கு எதிராக புதிய மசோதா வரை யறுக்கப்பட்டுள்ளது. இது மக்களின் அந்தரங்க உரிமையை பாதிக்கும் வகையில் உள்ளது. நாட்டில் தற் போது வரை தனிநபா் தரவுப் பாது காப்புச் சட்டம் இயற்றப்படாத சூழ லில், ஆதார் இணைப்புக்கான மசோதா தனிநபா் சுதந்திரத்திற்கு எதிரானது. இது பெருமளவிலா னோரின் வாக்குரிமை நீக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே, இந்த மசோ தாவை நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்ப வேண்டும்’’ என்று காங்கி ரஸ் மக்களவை குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்றத் தில் வாதிட்டார். “இந்த மசோதா வுக்கு இப்போது அவசியம் என்ன?” என்றும் சவுத்ரி கேள்வி எழுப்பி னார்.

காங்கிரசின் மற்றொரு தலைவ ரான மணீஷ் திவாரி எம்.பி. பேசு கையில், ‘‘வாக்களிப்பது மக்க ளுக்கு வழங்கப்பட்டுள்ள சட்டரீதி யிலான உரிமை. அதை ஆதார் சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது. கே.எஸ். புட்டா சுவாமி வழக்கில், மக்களின் தனிநபர் சுதந்திரம் (பிரை வஸி) அவர்களுக்கான அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரி வித்தது. தற்போது அந்த உத்த ரவை மீறும் வகையில் மசோதா உள்ளது’’ என்று குறிப்பிட்டார். திரி ணாமுல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராயும், புட்டா சுவாமி வழக்குத் தீர்ப்பு மீறப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார். பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. ரித்திஷ் பாண்டே பேசும்போது, ‘‘மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக தேர்தல் சட்டத் திருத்த மசோதா வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை முழுமையாக எதிர்க்கி றோம்’’ என்றார்.

“தனியுரிமைக்கான உரிமை ஒரு அடிப்படை உரிமையாக உள்ள போது, அந்த உரிமையைப் பறிக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்தால் நிறைவேற்ற முடியாது” என்று என்.கே. பிரேமச்சந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். “ஆதார் என்பது வசிப்பிடத்திற்கான ஆதாரம்தானே தவிர, குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல. அப்படியிருக்க, குடிமக்கள் அல்லாதவர்களுக்கு இந்த அரசு வாக்களிக்கும் உரிமையை வழங்கப் போகிறதா?” என்று சசி தரூர் எம்.பி. வினவினார். ‘’இந்த மசோதா குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு, நாடா ளுமன்ற விவாதத்திற்குப் பிறகே அதனை நிறைவேற்ற வேண்டும்’’ என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தி னார். ‘’இந்த மசோதாவைக் கடுமை யாக எதிர்க்கிறேன். அரசியல மைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை இந்த மசோதா குலைக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மீறுகிறது. ஒன்றிய அரசு இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தனித்தன்மையை மறுக்கிறது. சுதந்திரத்தைக் குறைக்கிறது’’ என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டார். இதேபோல சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், அனைத்து எதிர்க்கட்சி களின் எதிர்ப்பையும் புறந்தள்ளி மோடி அரசு தன்னிச்சையாக தேர்தல் சட்டத் திருத்த மசோதா -2021ஐ நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button