மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு பதிலடி தந்த தலித் இளைஞர்கள்!
பெங்களூரு, டிச.30- எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை யும் மீறி, கர்நாடக பாஜக அரசு, கடந்த வாரம் மதமாற்றத் தடைச் சட்ட மசோ தாவை சட்டப் பேரவையில் நிறை வேற்றியது. இதை எதிர்த்து, இடது சாரிகள், அரசியல் இயக்கங்கள், கிறிஸ் தவ- முஸ்லிம் அமைப்புக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே, மதமாற்றத் தடைச் சட்டத்தை கண்டித்தும், இதன்மூலமாக மக்களின் மதம்மாறும் உரிமையை பாஜக அரசு பறித்துவிட முயன்றால் அது நடக்காது என்று நிரூபிக்கவும் ஹசன் மாவட்டம் நிட்டூரைச் சேர்ந்த 50 தலித் இளைஞர்கள், இந்து மதத் தில் இருந்து பவுத்த மதத்துக்கு மாறி பதிலடி கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக அம்பேத்கரிய செயற்பாட்டாளர் சுவாமி நிட்டூர் பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார்.
அதில், “இந்து மதத்தில், தலித் மக் கள் சாதி ரீதியாக ஒடுக்கப்படுவதா லேயே பவுத்தம் தழுவுகிறோம். நாங்கள் இந்துக்களாக இருந்தபோது தீண்டாமை கடைப்பிடித்து, கோயி லுக்குள் அனுமதிக்க மறுத்தனர். ஆனால், நாங்கள் இப்போது சுதந்திர மாக உணர்கிறோம். எங்கள் செயல் பாட்டால் கோபமடைந்துதான் பாஜக, மதமாற்ற தடைச் சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல, கர்நாடக தலித் சங் கர்ஷ சமிதி தலைவர் மவாலி சங்க ரும், “எரியும் பிரச்சனைகளை திசைத் திருப்ப இந்த மதமாற்றத் தடைச்சட் டத்தை பாஜக கையிலெடுத்துள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டம், விரும்பிய மதத்தைத் தேர்ந்தெடுக்க சுதந்திரம் அளித்துள்ளது. அதனை யாரும் தடுக்க முடியாது” என்று கூறி யுள்ளார். கர்நாடகத்தில் ஹசன் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தலித் மக் கள், இந்து மதத்திலிருந்து வெளியேறி பவுத்தம் தழுவுவது அதிகரித்து வரு கிறது என்பது குறிப்பிடத்தக்கது.