தமிழகம்
மதத்தின் பெயரில் பகைமை வளர்த்தால் நடவடிக்கை – சங்கர் ஜிவால் எச்சரிக்கை
மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் பொய்யான செய்திகளை வெளியிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பொய்யான தகவலை பதிவிட்டதாக பாஜக மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. வினோஜ் பி.செல்வத்தின் பதிவு மதத்தின் அடிப்படையில் வெறுப்பையும் பகைமையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையில் உள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே உண்மை செய்திகளை திரித்து ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.