இந்தியா
பேரெழுச்சியுடன் தொடங்கியது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு!

இன்று (14.10.2022) ஆந்திர மாநிலம், விஜயவாடா மாநகரில் பேரெழுச்சியுடன் தொடங்கியது. வரும் 18.10.2022 ஆம் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் நாடு முழுவதும் இருந்து வந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

ரஷ்யா, சீனா, வங்கதேசம், நேபாளம், கியூபா, கிரீஸ், பிரான்ஸ், துருக்கி, பிரிட்டன், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து வந்துள்ள சகோதர கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

