புரோ கபடி நட்சத்திர வீரர்கள் இல்லாமல் சாதித்த ஜெய்ப்பூர்
கொரோனா அச்சத்துக்கு இடை யே பரபரப்பாக நடைபெற்று வரும் புரோ கபடி தொடரில் தோல்வியை சந்திக்காமல் வெற்றிநடையுடன் வலம் வரும் தில்லி அணிக்கு ஜெய்ப்பூர் அணி அதிர்ச்சி தோல்வியை கொடுத்து திகைக்க வைத்துள்ளது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் தான் என்றாலும் நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாமல் கத்துக்குட்டியாக இருக்கும் ஜெய்ப்பூர் அணி, தில்லி அணியை தோல்வி என்றால் இப்படி தான் இருக்கும் என பயத்தை காட்டியுள்ளது. திங்களன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 30-28 என்ற புள்ளிக் கணக்கில் தில்லியை வீழ்த்தி அசத்தியுள்ளது. ஜெய்ப்பூர் அணியில் தீபக் கூடா மட்டுமே நட்சத்திர வீரர் மற்ற வீரர்கள் சராசரி ஆட்டக் காரர்கள் தான். ஆனால் கபடி உலகின் நட்சத்திர வீரர் நவீன் கேப்டனாகவும், மன்ஜீத், சந்தீப் ஆகியோர் அடங்கிய பலமான தில்லியை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. முக்கியமாக நாங்கள் வெற்றி பெற்றுக் கொண்டே வருகிறோம் எங்களை வீழ்த்த யாரும் இல்லை என்ற எண்ணத்தை அடியோடு நொறுக்கியுள்ளது ஜெய்ப்பூர் அணி.
இன்றைய ஆட்டங்கள்
ஹரியானா-உத்தரப்பிரதேசம் (இரவு 7:30)
தில்லி – பெங்களூரு (இரவு 8:30)
இரண்டு ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.