தமிழகம்
புதுக்கோட்டை வேங்கைவயல் தலித் மக்களுக்கு எதிரான சாதிய கொடுமை: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் தலித் மக்கள் குடியிருப்பில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகும். நாகரீக சமுகத்தில் ஏற்க முடியாத இத்தகைய நிகழ்வுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்து வருகிறது.
விசாரணையைத் தீவிரப்படுத்தி சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க, தமிழ்நாடு அரசு, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது.