புதிய சாதனை
மோடி அரசு பெட்ரோல் விலையைத் தொடர்ந்து, டீசல் விலையையும் ரூ.100க்கு மேல் ஏற்றி புதிய சாதனை படைத்திருக்கிறது. ஏற்கனவே பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 101 ஆவது இடத்திற்கு வீழ்ந்திருக்கிறது. இதன் மூலம் சமீப நாட்களில் மட்டும் இந்த முப்பெரும் சாதனையை மோடி அரசு எட்டிப் பிடித்திருக் கிறது.
மோடி அரசின் ஒவ்வொரு சாதனையும் மக்களுக்கு சொல்லொண்ணா வேதனைகளை தருகிறது என்பதே எதார்த்தம். அந்த வரிசையில் தற்போது டீசலும் இணைந்திருக்கிறது. இந்தி யாவில் பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வில் 38 விழுக்காடு டீசல் ஆகும். டீசல் மீதான மொத்த வரியில் 71.8 விழுக்காடு ஒன்றிய அரசின் வரியா கும். போக்குவரத்து, தொழில் மற்றும் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருளாக இருக்கும் டீசல் மீது, இந்தளவிற்கு வரியை உயர்த்த வேண்டிய தேவை என்ன?
உலக பொருளாதாரம் கொரோனா தொற்றி லிருந்து மீண்டு வருவதற்கான சூழல் உருவாகி யுள்ள நிலையில், இந்தியப் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிற்கு இருக்கிறது. அதற்கு மக்களின் கையில் பணப் புழக்கத்தை அதிகரிக்க வேண்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும் போது செலவு செய்யும் திறனும் அதி கரிக்கும். அதன் மூலம் பொருளாதாரம் சீரடை யும். அதற்கான எந்த முயற்சியையும் ஒன்றிய அரசு எடுக்கவில்லை. சாதாரண செருப்பு அணிந்த வர்கள் கூட இனி விமானத்தில் செல்ல முடியும் என்றார் மோடி. ஆனால் உண்மை என்ன? விமான எரிபொருளை விட, பெட்ரோலின் விலையை 33 விழுக்காடு உயர்த்தி, செருப்பு அணிந்தவர்கள் சாலையில் கூட செல்ல முடியாத நிலையை உரு வாக்கியிருக்கிறார்.
2014ல் பெட்ரோல் மீது ஒன்றிய அரசின் வரி ரூ.9.20 ஆக இருந்தது. 2021ல் ரூ. 32.90 ஆக உயர்த்தி யிருக்கிறது. அதே போல் டீசல் மீது ஒன்றிய அரசின் வரி 2014ல் ரூ.3.46 ஆக இருந்தது. 2021ல் ரூ.31.80 ஆக உயர்த்தியிருக்கிறது. கடந்த 7 வரு டத்தில் மட்டும் பெட்ரோல் மீது 258 விழுக்காடும், டீசல் மீது 819 விழுக்காடும் ஒன்றிய அரசின் வரியை உயர்த்தியிருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிகள் மூலம் ரூ.3.61 லட்சம் கோடி கூடுதலாக மக்களிட மிருந்து மோடி அரசு பறித்திருக்கிறது.
நுகர்வோர் செலவு செய்யும் விகிதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2017 – 18ஆம் நிதியாண்டில் கடுமையாகச் சரிந்தது. அதிலி ருந்து தேசிய மாதிரி ஆய்வில் நுகர்வோர் செலவு குறித்த ஆய்வறிக்கையை வெளியிடுவதை மோடி அரசு நிறுத்திவிட்டது. புள்ளிவிவரங்களை மூடி மறைப்பதன் மூலம் மெய்யை ஒரு போதும் பொய்யாக்கிட முடியாது.
‘’வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின், ஒருவந்தம் ஒல்லைக் கெடும்” என்கிறார் திருவள்ளுவர். அதாவது குடிமக்கள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் ஆட்சி விரைந்து அழிவது உறுதி என்கிறார். அது போல மக்களின் மீது அனுதினமும் சுமைகளை ஏற்றி வஞ்சிக்கும் மோடி அரசு விரைந்து வீழ்வது உறுதி.