உள்ளூர் செய்திகள்

பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கத் தயங்கக்கூடாது

தூத்துக்குடி, நவ.17- பாலியல் குற்றங்கள் மாணவிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். புகார் அளிக்க தயங்க கூடாது என தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக் குமார் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக புனித மரியன்னை மகளிர் கல்லூரி கலையரங்கில் வைத்து மாண வியருக்கு சமூக வலைதள குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தற்போது கணினி வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு மிக அவசியமான ஒன்றாகும். தற்போது பெண்கள் மற்றும் குழந்தை களுக்கெதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த வகையான பாலியல் குற்றங்க ளுக்கென தனியாக சட்டங்கள் உள்ளது. அதில் மரண தண்டணை வரை பெற்று தரக்கூடிய வழிவகை உள்ளது. இந்த பாலியல் குற்றங்கள் குறித்து பெண்களுக்கு கண்டிப்பான விழிப்புணர்வு தேவை. பெண்கள் முகம் தெரியாத நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். மேலும் பெண்கள் தேவையில்லாமல் தங்கள் புகைப் படம் மற்றும் சுயவிபரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்கையில் நமக்கே தெரி யாமல் கணிணி வழி குற்றங்கள் நடை பெற அதிக வாய்ப்புள்ளது.

இதுபோன்று குற்றங்கள் நடை பெற்றால் நீங்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கும் சைபர் குற்ற பிரிவு காவல் நிலை யத்திலோ அல்லது மாவட்டத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம். மேலும் இலவச தொலைபேசி எண்களான அவசர போலீஸ் எண் 100, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை ஹலோ போலீஸ் எண் 95141 44100, மகிளர் உதவி எண் (Women Helpline) 1091 மற்றும் சைபர் குற்ற பிரிவு தொலை பேசி எண் 155260 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் புகார் அளிக்க லாம். உங்கள் சுயவிவரங்கள் ரகசிய மாக வைக்கப்படும். ஆகவே எப்பொ ழுதும் மாணவிகளாகிய நீங்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி தனது உரையை நிறைவு செய்தார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோ வன் தலைமையில் சைபர் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன், உதவி ஆய்வாளர் சுதாகரன் மற்றும் போலீசார் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் புனித மரியன்னை மகளிர் கல்லூரி முதல்வர் சகோதரி. லூசியா ரோஸ், பொருளாளர் சகோதரி. புளோரா மேரி, துணை முதல்வர் சகோதரி. குழந்தை திரேஸ், தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வனிதா உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button