பாரம்பரிய சின்னங்கள் கண்காட்சி
இராஜபாளையம், நவ.24- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ராஜீக்கள் கல்லூரியில் உலக பாரம்பரிய சின்னங்கள் கண்காட்சியை பிரபல தொல்லியலாளரும் தென் னிந்தியக் கோயில்கள் தொல் லியல் கண்காணிப்பாளருமான அமர்நாத் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்திய தொல்லியல் துறையின் சென்னை பிரிவு, ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி முதுகலை மற்றும் வரலாற்று ஆய்வு மையம் இணைந்து இந்த கண்காட்சி நடத்தின. பழைய முதுமக்கள் தாழி, முது மக்கள் பயன் படுத்திய உலோகங்கள் உள்பட பல்வேறு பொருட் கள் காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்தன. வரலாற்றுத்துறை மாணவ மாணவியரின் கேள்விகளுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணன்ப திலளித்தார். நிகழ்ச்சியில் அமர்நாத் இராமகிருஷ்ணா பேசுகை யில், அனைத்து கல்லூரி களிலும் தொல்லியல் அருங் காட்சியகம் அமைப்பதற்கு அரசு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் தளவாய்புரம், மாங் குடி உள்பட பல்வேறு இடங்க ளில் ஆய்வு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளன. அதை முறை யாக ஆய்வு செய்தால் பல விப ரங்கள் இன்னும் கிடைக்க ஏது வாக இருக்கும். இதன்மூலம் வரலாற்றுத் துறை மாண வர்களுக்கு சாதிக்க பல வகைகளில் வழிவகை ஏற் படும் என்று தெரிவித்தார்.