இந்தியா
பாரத் ஒற்றுமை யாத்திரை: காங்கிரஸ் கட்சி ஜனநாயக ரீதியாக தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் – டி ராஜா
இந்திய தேசிய காங்கிரஸ் ‘பாரத் ஒற்றுமை யாத்திரையை’ நடத்தி வருகிறது. ஆனால், சத்தீஸ்கரில் உள்ள காங்கிரஸ் அரசாங்கமோ, பழங்குடி மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 100 கிலோ மீட்டர் தொலைவு பாத யாத்திரை நடத்த அனுமதி மறுக்கிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விளிம்புநிலை மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் ஜனநாயக ரீதியாக, சித்தாந்த ரீதியாக தெளிவான நிலைப்பாட்டை மேற்கொள்ள சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.