பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடை: எதிர் விளைவுகளை உண்டாக்கும் நடவடிக்கை – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை
குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது பின்வருமாறு:
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள தடை எவ்வித பலனும் அளிக்கப் போவதில்லை என்பதோடு இது போன்ற நடவடிக்கை பெரும்பாலும் எதிர் விளைவுகளையே உண்டாக்கியுள்ளன என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கருதுகிறது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கருத்துக்களை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கவில்லை என்பதோடு எதிர் தரப்பினர் மீது இவ்வமைப்பு மேற்கொண்ட வன்முறை நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது.
இவ்வாறு தேசிய செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.