பாஜக-வைச் சரிய வைக்க முடியும் என சமாஜ்வாதி கட்சி நிரூபித்துள்ளது!
உ.பி. மக்களுக்கு அகிலேஷ் நன்றி
லக்னோ, மார்ச் 11 – உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தலில் முன்பைவிட சிறப்பான உயர்வை கண்டதன் மூலம் பாஜக-வைச் சரித்து காட்ட முடியும் என சமாஜ்வாதி கட்சி நிரூபித்துள்ளதாக, அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் மொத்த முள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதி களில், ஆளும் பாஜக 273 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அகி லேஷின் சமாஜ்வாதி கட்சி, 125 தொகுதிகளில் வெற்றிபெற்றுள் ளது. இந்த வெற்றிமூலம் உத்தரப்பிர தேசத்தில் பாஜக தொடர்ந்து 2-ஆ வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது என்றாலும், கடந்த 2017 தேர்தலைக் காட்டிலும் பாஜக பெரிய சரிவைக் கண்டுள்ளது. அந்தத் தேர்த லில் 322 தொகுதிகளில் மாபெரும் வெற்றியை பெற்ற பாஜக, 2022 தேர்தலில் 273 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுமார் 50 இடங்களை அக்கட்சி இழந்துள்ளது. அதேநேரம் 2017 தேர்தலில் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி யிருந்த சமாஜ்வாதி கூட்டணி, இந்த தேர்தலில் மொத்தம் 125 இடங் களைக் கைப்பற்றி 2-வது இடம் பிடித்துள்ளது. 32.06 சதவிகித வாக்கு களையும் பெற்றுள்ளது. 2017 தேர்தலில் 47 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி தோற்றபோது, சமாஜ்வாதி பெற்ற வாக்குகள் 21.8 சதவிகிதம். 2012 தேர்தலில் 224 தொகு திகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தபோது கூட, சமாஜ்வாதி கட்சி 29.15 சதவிகித வாக்குகளைத்தான் பெற்றிருந்தது. தற்போது அதனைக் காட்டிலும் கூடுதலாக 32.06 சதவிகித வாக்குகளை அள்ளி செல்வாக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அகிலேஷ் மக்களுக்கு நன்றி தெரிவித்துள் ளார். இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த தேர்தலை விட வாக்கு சதவிகி தத்தை ஒன்றரை மடங்கு அதிகப் படுத்தி, வெற்றி இடங்களை 2 மடங்கு அதிகப்படுத்திய உ.பி. மக்களுக்கு எங்களின் இதயப்பூர்வ மான நன்றிகள். இதன் மூலம் பாஜக வின் இடங்களை சரிக்க முடியும் என்று காட்டியிருக்கிறோம். பாஜக- வின் இடங்களை சரிப்பது தொட ரும். இப்போது பாதிக்கும் மேற்பட்ட மாயைகளும் குழப்பங்களும் தீர்ந்துவிட்டன. இன்னும் சில நாள்களில் மீதியும் தீர்ந்து விடும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.