பாஜக எம்.பி. திவாரி பிரச்சாரத்தில் செருப்பைக் காட்டி மக்கள் எதிர்ப்பு!
![](https://www.janasakthi.in/wp-content/uploads/2022/02/2022-02-03-205272-148cceff-1-780x470.jpg)
லக்னோ, பிப்.3- உத்தரப் பிரதேசத்தில் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி பிரச்சாரம் செய்ய சென்றபோது அவருக்கு எதி ராக பொதுமக்கள் செருப்பை தூக்கிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்தது பர பரப்பை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் பிரச்சா ரத்திற்கு செல்லும் பாஜக வேட்பா ளர்களை, கிராமங்களுக்குள் விடா மல் பொதுமக்கள் விரட்டியடித்து வரு கின்றனர். அண்மையில், முசாபர்நகர் மாவட்டம் கட்டவுலி தொகுதி பாஜக எம்எல்ஏ விக்ரம் சிங் சைனி பிரச்சா ரத்திற்கு சென்றபோது, கிராம மக்கள் அவரை திரும்பிப் போகச் சொல்லி, எதிர்ப்பு தெரிவித்ததுடன், எம்எல்ஏ சைனியின் காரை, ஊர் எல்லைவரை சென்று விரட்டியடித்தனர். முன்னாவர் கலானில் என்ற இடத்திலும் அவர் விரட்டியடிக்கப்பட்டார். சைனியைத் தொடர்ந்து,
பாக்பத் தொகுதிக்கு உட்பட்ட சப்ரவ்ளியில் பாஜக வேட்பாளர் சஹேந்திர ரமலா வை கறுப்புக் கொடியேந்தியும், சூர் கிராமத்தில், சிவல்காஸ் தொகுதி பாஜக வேட்பாளர் மணிந்தர் பால் சிங்கை, கல்லால் எறிந்தும் பொதுமக் கள் துரத்தியடித்தனர். வாகனங்களின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக் கினர். தற்போது தில்லி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி நொய்டாவில் விரட்டி யடிக்கப்பட்டுள்ளார். தற்போதைய எம்எல்ஏ-வும், ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-கின் மகனுமான பங்கஜ் சிங்-கை ஆதரித்து மனோஜ் திவாரி நொய்டாவில் வாக்கு சேகரித்தார். அப்போது, மக்கள் – குறிப் பாக பெண்கள் மனோஜ் திவாரிக்கு எதிராகவும், பாஜக-விற்கு எதிராக வும் முழக்கங்களை எழுப்பியதுடன், செருப்பை தூக்கிக் காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நொய்டாவில் தலித் மக்கள் வசிக்கும் ‘செக்டர் 17’ என்ற குடியிருப்புப் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இத னால், வீடு, வீடாகப் பிரச்சாரம் செய்வ தற்கு சென்றிருந்த மனோஜ் திவாரி பாதியிலேயே அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு கிளம்பியுள்ளார்.