பணி நீக்க உத்தரவை ரத்து செய்திட வேண்டும் – சென்னையில் மினி கிளினிக் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நீக்க உத்தரவை ரத்து செய்திட வேண்டும், பணி பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தி சென்னையில் மினி கிளினிக் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் (23.03.2022) அன்று நடைபெற்றது.
# மினி கிளினிக் மருத்துவர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது!
# பணி நீக்க உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்!
# பணி நீட்டிப்பு வழங்கிட வேண்டும்!
# சிறப்பு எம்.ஆர்.பி ( MRB special ) தேர்வு நடத்திட வேண்டும்!
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், மினிகிளினிக் மருத்துவர்களின் ஆர்ப்பாட்டம் (23/03/2022) அன்று காலை நடைபெற்றது.
டாக்டர் .ஆர். இரவி மங்கேஷ்கர் தலைமை தாங்கினார். டாக்டர் இரா. ராமச்சந்திரன், டாக்டர் ஆர்.சூரியா, டாக்டர் செ. முகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் , தமிழ்நாடு மருத்துவத் துறை பணியாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி , டாக்டர் சந்தோஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 பெண் மருத்துவர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
இவண், டாக்டர்.இரா.இரவி மங்கேஷ்கர். 8667217886