பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு: விரிவான ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதகமான தாக்கம் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு அதன் ஆழ்ந்த கவலையைத் தெரிவிப்பதுடன், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது அரசாங்கம் தெரிவித்த தவறான கூற்றுகள் குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு (இந்தத் தீர்ப்புக்கு 4 நீதிபதிகள் ஆதரவு, 1 நீதிபதி எதிர்ப்பு) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்று கருதுகிறது.
டிவுகள் மேற்கொள்ளும் செயல்முறையில் உள்ள சட்டரீதியான அம்சத்தை மட்டுமே அந்தத் தீர்ப்பு கருத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. மக்கள் மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஏற்படுத்திய கொடூரமான தாக்கம் குறித்து அது கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகு, அது குறித்து அரசாங்கம் தெரிவித்த தவறான கூற்றுகள் குறித்த உண்மைகளை மக்கள் அறிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. பணப்புழக்கம் அதிகரித்துள்ளது; கருப்புப்பணம் குறையவில்லை; பயங்கரவாதம் குறையவில்லை; சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மீது அந்த நடவடிக்கை ஏற்படுத்திய கொடூரமான தாக்கம் குறித்து பதிவு செய்யப்படவில்லை. எனவே, இந்தப் பிரச்சனை மீது விரிவான ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசாங்கத்தின் முடிவெடுக்கும் உரிமையை உயர்த்திப் பிடிக்கிறதே தவிர அந்த முடிவின் விளைவுகள் குறித்து எவ்விதத்திலும் ஒப்புக் கொள்வதாக இல்லை.
இவ்வாறு கட்சியின் தேசிய செயற்குழு வெள்ளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.