பட்டினிக்கு பலியாகும் ஆயிரக்கணக்கான குழந்தைகள்
காபூல், பிப்.3- ஆப்கானிஸ்தானில் போதிய அளவு மருத்துவ வசதிகள் இல்லாத தால் நிமோனியா மற்றும் பட்டினி யால் ஆயிரக்கணக்கான குழந்தை கள் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளன. கடந்த சில நாட்களாகவே, நிமோ னியா காய்ச்சல் ஆப்கானிஸ்தான் முழுவதும் பரவி வருகிறது. பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சை செய்யப் போதுமான வசதிகள் இல்லை. மருத்துவ வசதிகள் இருக்கும் இடங்க ளிலும் அந்த வசதிகளைப் பயன் படுத்திக் கொள்ளும் அளவுக்கு மக்க ளிடம் பணம் இல்லை. இதனால் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக் கான குழந்தைகள் உயிரிழக்க நேரி டலாம் என்று குழந்தைகளைப் பாது காப்போம் என்ற தொண்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஆப்கானிஸ்தானின் அர சைத் தூக்கி எறிந்துவிட்டு தலிபான் கள் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர்.
இதை முன்பே எதிர் பார்த்த அமெரிக்க ராணுவம் வெளி யேறியது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து வேலை வாய்ப்பின்மை பெரிய அளவில் உரு வெடுத்துள்ளது. இதனால் தங்கள் குடும்பங்களைக் கவனித்துக் கொள்ள முடியாத நிலைமைக்கு குடும்பத் தலைவர்கள் தள்ளப் பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைந்து நிமோனியா காய்ச்சலாக மாறியதற்கு இது முக்கியமான காரணமாகக் கூறப்படு கிறது. வாழ்மா என்ற ஒன்பது வயதுக் குழந்தையின் நிலைமையை குழந்தைகளைப் பாதுகாப்போம் தொண்டு நிறுவனம் அடையா ளமாகக் காட்டுகிறது. இக்குழந்தை யின் பெற்றோர்கள் மட்டுமின்றி, அக்குழந்தை வசிக்கும் கிராமத்தில் உள்ளவர்கள் அனைவருமே வேலை யிழந்தனர். குழந்தைகளைக் காப்பாற்று வதற்காக தங்கள் உணவை பெற் றோர்கள் தியாகம் செய்தனர்.
ஆனால் வாழ்மா உடல்நிலை பாதிக்கப்பட்டு, சிரமப்பட்டபோது நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கோ ஆக்சிஜன் தட்டுப்பாடு இருந்தது. ஒருவழி யாக அக்குழந்தை காப்பாற்றப் பட்டது. ஆனால் இந்த வேறு சில குழந் தைகளுக்குக் கிடைக்கவில்லை. தொண்டு நிறுவனம் மேற் கொண்ட ஆய்வில், மருத்துவ வசதி யைப் பெற முடியாதவர்களில் 60 விழுக்காட்டினரிடம் பணம் இல்லை. மேலும் 31 விழுக்காட்டினர், தங்களு க்கு உயிர் போய் விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டால் மட்டுமே மருத்துவமனைக்குச் செல்வோம் என்றனர். நிமோனியாவால் இவ்வ ளவு பேர் பாதிக்கப்பட்டு நான் பார்த்ததேயில்லை என்கிறார் மருத்து வர் ஒருவர். மருத்துவமனைகளில் ஒரே படுக்கையில் நான்கைந்து குழந்தைகள் படுத்து சிகிச்சை பெற்று வருகின்றன. உடனடி உதவி தரப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகி விடும் என்று குழந்தைகளைப் பாது காப்போம் தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.