பட்டினப் பிரவேசம்: தமிழக அரசு கொள்கையில் தடுமாறாமல், உறுதி காட்ட வேண்டும் – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
நாகரிக உலகில் மனிதனை மனிதன் சுமக்கும் பல்லக்குப் பயண பட்டினப் பிரவேச நிகழ்வை தர்மபுரம் ஆதினம் பிடிவாதமாக நடத்துகிறது. பகுத்தறிவு சிந்தனையோடு மதச்சார்பற்ற பண்புகளை அடிப்படையாகக் கொண்ட சட்டத்தின் ஆட்சியை சமூக நீதி பாதையில் நடத்தப்படும் அரசு பட்டினப் பிரவேசம் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இதை நாகரிக சமுகத்தின் அனைத்துப் பகுதியினரும் வரவேற்றனர். இந்நிலையில், மடாதிபதிகளும், ஆதீனங்களும் முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசிய பிறகு, அரசு, பட்டினப் பிரவேச நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொண்டது. இது அரசு கடைப்பிடித்து வரும் கொள்கையில் ஏற்பட்டிருக்கும் ஒரு பின்னடைவாகும்.
ஆதினங்களும், மடங்களும் தங்கள் வழக்காறுகளை சீர்திருத்தி வந்திருக்கும் வரலாற்றை மறந்து, மனிதர்களை கொண்டு பல்லக்கு தூக்கும் பட்டின பிரவேசத்தை நடத்துவதில் காட்டும் பிடிவாதம் வகுப்புவாத, மதவெறி சக்திகளின் அழுத்தங்களை வெளிப்படுத்துகிறது. இது போன்ற நேர்வுகளில் அரசு கொள்கையில் தடுமாறாமல், உறுதி காட்ட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.