பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் சோனு சூட் சகோதரி மாளவிகா!
சண்டிகர், ஜன.11- பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா சூட், திங்க ளன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த நிலையில், அவர் மோகா தொகுதியில் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து தெரி வித்துள்ளார். “என் சகோதரி மாளவிகா சூட், அரசியலில் சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறார். அவர் மக்களுக்கும், சமுதா யத்திற்கும் சேவை செய்யவே அரசிய லுக்கு வருகிறார். பஞ்சாப் சட்டப்பேர வைத் தேர்தலில் எனது சகோதரி போட்டி யிடுவார். எந்த கட்சியில் சேர்ந்து போட்டி யிடுவார் என்பதை பின்னர் அறிவிப் பேன். கட்சியைவிட கொள்கைதான் முக்கியம். காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி என இரண்டு கட்சிகளுமே நல்ல கட்சிகள்தான்” என்று நடிகர் சோனு சூட், கடந்த நவம்பரில் கூறி யிருந்தார்.
கொரோனா பொதுமுடக்கத்தின் போது, பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர் களை தனது சொந்த செலவில் ஊர் களுக்கு அனுப்பி வைத்தவர் சோனு சூட். இதனால் நாடு முழுவதும் அவ ருக்கு நற்பெயர் கிடைத்த நிலையில், பாஜக அவரை தனது கட்சியில் சேர்த்துக் கொள்ள முயன்றது. சோனுசூட் அதற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் சோனு சூட்டுக்குச் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோத னையும் நடத்தப்பட்டது. இது சோனு வை அதிருப்திக்கு உள்ளாக்கியது. அதைத்தொடர்ந்தே தனது சகோதரி அரசியலுக்கு வரவுள்ளதாக சோனுசூட் அறிவித்தார். இந்நிலையில் சோனு சூட்டின் சகோ தரி மாளவிகா, திங்களன்று பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, காங்கி ரஸ் தலைவர் சித்து ஆகியோர் முன்னி லையில் காங்கிரசில் இணைந்தார். அப்போது, “சோனு சூட் அவரது மனித தன்மைக்கும், அன்பிற்கும் பெயர் போனவர். அவரது பெயரை உலகம் அறியும். இன்று அவரது குடும்பத்தில் இருந்து ஒருவர் காங்கிர சில் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கி றது” என்று முதல்வர் சரண்ஜித் சிங் வர வேற்ற நிலையில், “மாளவிகா சூட் மோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பா ளராக நிறுத்தப்படுவார்” என்று சித்து தெரிவித்துள்ளார்.