இந்தியா
பஞ்சாப்பில் பாதுகாப்பு விதிமீறல் விவகாரம் குடியரசுத் தலைவரை சந்தித்த பிரதமர் மோடி
புதுதில்லி, ஜன.6- பஞ்சாப்பில் பாதுகாப்பு விதிமீறல் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். பஞ்சாப் சென்றிருந்த பிரதமர் மோடி, ஹூசைனி வாலாவில் தேசிய போர் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்தார். மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டு, சாலை மார்க்கமாக சென்றார். அப்போது ஹூசைனிவாலா அருகே பிரதமரின் வாகனத் தொடரை போராட்டக்காரர்கள் மறித்தனர். பிரதமருக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என பஞ்சாப் அரசு மீது பலரும் குற்றம் சாட்டினர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு குறித்து கவலை தெரிவித்தார்.