தமிழகம்
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்க!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பகுதிநேர சிறப்பு ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் என பலர் தங்களை பணிநிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் இவர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று பணிநிரந்தரம் செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.