நேட்டோ உலகிற்கே ஆபத்து இவோ மொரேல்ஸ் எச்சரிக்கை
சுக்ரே, மார்ச் 11- அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணி உலகிற்கே ஆபத்து என்றும், அது கலைக்கப்பட வேண்டும் என்றும் பொலிவியாவின் முன்னாள் ஜனாதி பதி இவோ மொரேல்ஸ் கோரியுள்ளார். உக்ரைனில் உள்ள நிலைமை குறித்துக் கருத்து தெரிவித்த அவர், உக்ரைனில் தற்போது நடந்து வரும் நிகழ்வுகளுக்கு நேட்டோ ராணுவக் கூட்டணியை விரிவு படுத்த வேண்டும் என்ற கொள்கையே காரணம் என்று கூறியுள்ள மொரேல்ஸ், ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடை யிலுள்ள பிரச்சனையின் துவக்கம் என்பது விரிவாக்கம் மற்றும் தலையீடு ஆகிய அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் கொள்கைகளால் ஏற்பட்டதாகும் என்று தெரிவித்துள்ளார்.
நேட்டோ பற்றிப் பேசிய அவர், “உலக அமைதிக்கு, உலகப் பாதுகாப்புக்கு நேட்டோ ஆபத்தானதாகும். அதை ஒழித்துக் கட்டவே நாங்கள் சமூக அமைப்புகளு டன் உடன்பாடுகளை எட்டிக் கொண்டிருக்கி றோம். இந்த உடன்பாடுகள் லத்தீன் அமெ ரிக்காவில் மட்டுமல்ல, அனைத்துக் கண்டங்களிலும் உள்ள அமைப்புகளைத் தொடர்பு கொண்டு போடப்படுகின்றன. நேட்டோவுக்கு எதிராக எதுவும் செய்யா விட்டால், மனிதகுலத்திற்கு நிரந்தரமான ஆபத்தாக அது உருவாகிவிடும்” என்றார். மனித குலத்திற்கு எதிரான உக்ரைனின் நடவடிக்கைகளையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சொந்த நாட்டிலேயே 2014 ஆம் ஆண்டு முதல் மக்களுக்கு எதிரான தாக் குதல்கள் நடந்துள்ளன. இது ரஷ்யாவுட னான மோதலுக்கு வழிவகுத்தது. உக்ரை னைக் கைப்பற்றுவதில் அமெரிக்காவும் மிக ஆர்வமாக இருக்கிறது.
இராக்கில், ஆப் கானிஸ்தானில் மற்றும் லிபியாவில் உள்ள இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக அமெரிக்கா, அந்த நாடுகளை எல்லாம் ஆக்கிரமித்ததைப் போன்றே, உக்ரைனை யும் ஆக்கிரமித்து சுரண்ட விரும்புகிறது. அதோடு ரஷ்யாவை ராணுவ ரீதியாகச் சுற்றி வளைப்பதும் அமெரிக்காவின் நோக்க மாகும் என்று குற்றம் சாட்டுகிறார் மொரேல்ஸ். அமெரிக்காவின் நோக்கம் பற்றிக் குறிப்பிட்ட மொரேல்ஸ், “எப்போதுமே போர் களைத் தூண்டுவது அமெரிக்காவின் வழக்கமாகும். தனது ஆயுதங்களை விற்க, தலையீடுகள் செய்ய, ராணுவத் தளங்களை அமைக்க மற்றும் பிற நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்ட போன்ற காரணங்க ளுக்காக அமெரிக்கா இந்த நடவடிக்கை களில் ஈடுபடுகிறது” என்று சுட்டிக்காட்டி னார். நேட்டோ கலைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகளை இணைக்கும் பணியில் மொரேல்ஸ் ஈடுபட்டுள்ளார்.