நெல் கொள்முதல் நிலைய ஊழியர் ஊதியம் உயர்த்தப்படும்

தஞ்சாவூர், டிச.30- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூரில் வியாழனன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மா.சுப்பிரமணியன், எஸ்.ரகுபதி, அர.சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.எஸ்.சிவசங்கரன், அரசு கொறடா கோவி. செழியன், எம்பிக்கள் எஸ்.எஸ்.பழநிமாணி க்கம், செ.ராமலிங்கம், சண்முகம், அப்துல்லா, எம்எல்ஏக்கள் துரை.சந்திர சேகரன், க.அன்பழகன், க.அண்ணாதுரை, அசோக்குமார், நீலமேகம், ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 44,525 பேருக்கு 238.40 மதிப்பீட்டில் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியும், ரூ.894.56 கோடி மதிப்பீட்டில் 134 பணிகளு க்கு அடிக்கல் நாட்டியும், ரூ.98.77 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 90 பணிகளை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியாதவது: தற்போது தமிழகத்தில் கொரோனா மெல்ல தலைதூக்க தொடங்கி உள்ளது. வெளிமாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்தாலும் தமிழகத்தில் கட்டுக்குள் தான் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வழக்கமாக குறுவை சாகுபடி 1 லட்சத்து 6 ஆயிரத்து 250 ஏக்கர் என்ற அளவிலே இருந்தது. ஆனால், தற்போது இலக்கை தாண்டி 1 லட்சத்து 66 ஆயி ரத்து 135 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது 48 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட சாதனை. இந்த மாபெரும் சாதனைக்கு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளும் காரணமாகும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
அதற்கு முன்னர் தூர்வாருதல் நடந்தது. குறுவை தொகுப்பு திட்டத்தில் மானிய விலையில் உரங்கள், விதை நெல்கள் வழங்கப்பட்டன. தற்போது சம்பா, தாளடி சாகுபடியும் இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் நெல் சாகுபடி பரப்பை அதிகரிப்பதில் இந்த 6 மாத காலத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளோம். நுகர்பொருள் வாணிப கழக நெல்கொள்முதலில் பணிபுரியும் தொழி லாளர்கள், ஊழியர்கள், உதவியாளர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி கோரிக்கையை ஏற்று பட்டியல் எழுத்தருக்கு ரூ.5,285 ஆக ஊதிய உயர்வு வழங்கப்படும். உதவியாளர்களுக்கு ரூ.5218 வழங்கப்படும். இதில் அகவிலைப்படி ரூ.3,499 சேர்த்து இது வழங்கப்படும்.
இதேபோல் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.3.25 ரூபாயி லிருந்து மூட்டை ஒன்றுக்கு ரூ.10 உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற் காக கூடுதலாக ரூ.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே கொள்முதல் பணி யாளர்கள் எவ்வித புகாருக்கும் இட மளிக்காமல் பணியாற்ற வேண்டும். தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றி காட்டுவதே லட்சியம். அதனை இலக் காக கொண்டு பயணித்து வருகிறோம். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தற்போது இலக்கை நோக்கிய பயணத்தில் முதல் 6 மாதத்தில் பெரிய வெற்றியை தமிழக அரசு பெற்றுள்ளது என்றார். விழா அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் வீணை உள்ளிட்ட 9 பொருட்களின் கண்காட்சி அரங்கையும், பின்னர் விழா முடிந்து சரஸ் வதி மகால் நூலகத்தினையும் முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.