தமிழகம்
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்புக!
அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம்
நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு உடனே அனுப்ப கோரி தமிழகம் முழுவதும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் உண்ணவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற மாணவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், கட்சியின் செயற்குழு உறுப்பினர் க.சந்தானம், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ரவீந்திரநாத், டாக்டர். சாந்தி ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலச் செயலாளர் திணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.