தமிழகம்

நாளை அனைத்துக் கட்சி கூட்டம்

சென்னை,ஜன.6- நீட் தேர்வு விவகாரம்தொடர்பாக ஜனவரி 8 ஆம் தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடை பெறும் என்று சட்டப்பேரவையில் முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அறி வித்தார். மருத்துவப் படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால் இதற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப் பட்டு வருகிறது.

இந்த நிலையில் வியாழனன்று சட்டப்பேரவை10-வது விதியின் கீழ் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறியதாவது:- எந்தவொரு கல்லூரிச் சேர்க்கை யாக இருந்தாலும், நுழைவுத் தேர்வு ஏழை எளிய, கிராமப்புற விளிம்பு நிலை மாணவ சமுதாயத்தை பாதிக் கும். அதனால் அந்தத் தேர்வுகளைத் தவிர்த்து, பள்ளிக் கல்வித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்ட தாக கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் மாற்ற முடியாத உறுதிப்பாடு கொண்டதாக இந்த அரசு இருக்கிறது. அதாவது, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப் படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்ப தில் இந்த அரசு உறுதியாக உள்ளது.

கல்லூரி உரிமைகள் பறிப்பு

ஆனால், கடந்த காலத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம், அதன்பிறகு கொண்டு வரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முன்னி றுத்தி, நமது மாணவர்களை வெகு வாக பாதித்துள்ளன. மாநில அரசு நிதியிலிருந்து, மாநில அரசுகளால் தொடங்கப்படக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் எவ்வாறு அம்மாநில மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யக் கூடிய உரிமையை மாநில அரசுகளிட மிருந்து பறித்து விட்டது ஒன்றிய அரசு.

வேடிக்கை பார்க்க முடியாது
மாணவர்களின் கல்விக் கனவைச் சிதைப்பதாக மட்டுமல்ல; இந்தி யாவின் கூட்டாட்சித் தத்துவத்தை சீர் குலைப்பதாகவும் இந்தச் செயல்கள் அமைந்துவிட்டன. இதனை நாம் வேடிக்கை பார்க்க முடியாது. மாநில உரிமைகளையும் நமது மாணவர் களுடைய நலனையும் மீண்டும் நிலை நிறுத்தும் நோக்கத்தோடு ஒருமன தாக 19.9.2021 அன்று ஒரு சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டுள் ளது. இந்தச் சட்டமுன்வடிவு இன்ன மும் ஆளுநரால், குடியரசுத் தலைவ ருடைய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமல் இருக்கிறது. இது குறித்து, ஆளுநரை நானே நேரில் சென்று சந்தித்து வலியுறுத்தி யிருக்கிறேன்.

அமித்ஷாவுக்கு கண்டனம்

இதனைத் தொடர்ந்து, கடந்த 28.12.2021 அன்று மக்களவை திமுக தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் குடியரசுத் தலைவரிடமும் மனு ஒன்றை அளித்திருக்கிறார்கள். மேலும் வலியுறுத்திட, அனைத்துக் கட்சி மக்களவை உறுப்பினர்களும், உள்துறை அமைச்சரை நேரிலே சந்திக்க நேரம் கேட்டனர். ஆனால், இதுவரையிலே, அவர்களைச் சந்திக்க உள்துறை அமைச்சர் மறுத்து வருகிறார். மக்கள் பிரதிநிதிகளை உள் துறை அமைச்சர் சந்திக்க மறுப்பது, மக்களாட்சியின் மாண்புக்கு எதிரான தாகும். சமூக நீதியை நிலை நாட்டுவதில் நாட்டிற்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டின் ‘நீட்’ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு எதிரான இந்தப் போராட்டத்தையும், சமூகநீதி இயக்கத்தின் அடுத்த கட்டப் போராட்டம் எனக் கருதி, நாம் நமது கொள்கையிலிருந்து எள் முனையளவு கூட பின்வாங்காமல் முன்னெடுத்துச் செல்வோம். எனவே, அடுத்தக்கட்ட நட வடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைபாட்டி னை எட்டுவதற்கு, சட்டமன்றத்தில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சி களின் கூட்டத்தை ஜன. 8 அன்று கூட்டுவது என்று முடிவு செய்திருக் கிறோம். அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அந்தக் கூட்டத் தில் எடுக்கப்படக்கூடிய முடிவுகளின் அடிப்படையில் நீட் தேர்வுக்கு எதிரான, சமூக நீதிக்கான நமது போராட்டம் தொடரும். இவ்வாறு முதலமைச்சர் பேசி னார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button