நாட்டு மக்களிடம் மோடி பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் ! – கே.சுப்பராயன் MP
அரசியலமைப்புச் சட்ட அடிப்படையில், பரிபூரண சுதந்திரத்துடன், தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு சுயேட்சையான அமைப்புதான் தேர்தல் கமிஷன்!
எவர் ஒருவரும், எந்த அமைப்பும் தலையீடு செய்யக்கூடாத தனித்த அதிகாரம் பெற்ற தலைமைத் தேர்தல் கமிஷனரையும், இதர இணைக்கமிஷனர்களையும், தனது அலுவகத்திற்கு அழைத்து பிரதமர் மோடி பேசியது சகிக்கமுடியாத, அரசியல்சட்டவிரோத அத்துமீறலாகும்!
இது குறித்து நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் மோடி!
தேர்தல் கமிஷனர்களாவது, ‘வரமுடியாது’ என்று உறுதியான நிலை எடுத்து அரசியல் சட்டப்படி நடந்திருக்கவேண்டும்!என்ன செய்வது? அதிகாரத்திமிருக்கு முன்னர் அவர்கள் முதுகெலும்பற்றவர்கள்!
ஜனநாயகத்தை, அரசியல் சட்டத்தை மண்ணோடு மண்ணாக்குகிறவரை மோடி தன் ஆட்டத்தை நிறுத்த மாட்டார்!
ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரி கட்சிகள், விவேகத்தோடுகூடிய, மக்கள் விழிப்பூட்டும் இயக்கத்தை, விரைவாக, இடைவிடாது, தொடர்ந்து நடத்த வேண்டும்!
இது காலத்தின் கட்டளை!
இவ்வாறு தோழர் கே.சுப்பராயன் MP முகநூலில் பதிவு செய்துள்ளார்.