நாடகம் ஆட வேண்டாம்
பெய்ஜிங்/மாஸ்கோ, டிச.10- ஜனநாயகத்திற்கான மாநாடு என்ற பெயரில் அமெரிக்கா ஏற்பாடு செய்திருப்பது வெறும் நாடகம் என்று மக்கள் சீனமும், ரஷ்யாவும் கண்டித்துள்ளன. அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்ற பிறகு, சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளன. ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடு களுக்கு இடையிலான பிரச்சனை யைப் பயன்படுத்த விரும்புகிறது. சீனாவுக்கு எதிராக ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடு களை முன்னிறுத்துகிறது. தற்போது சுமார் 110 நாடுகளை ஒருங்கிணைத்து ஜனநாயகத்திற்கான மாநாட்டை நடத்தியிருக்கிறது. அமெரிக்காவின் இந்த நட வடிக்கையை விமர்சித்துள்ள ரஷ்யா வெளியுறவுத்துறை செய்தித் தொடர் பாளர் மரியா சகரோவா, “ஊழலைத் தடுப்பதாகவும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதாகவும் மற்றும் ஜன நாயக மாண்புகளை நிலை நிறுத்துவ தாகவும் கூறிக் கொண்டு நாடுகளின் இறையாண்மையை அமெரிக்கா பறிக்கிறது. பல நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுகிறது. தனது சொந்த நலன்களுக்காக விளம் பர நாடகத்தை அமெரிக்கா நடத்து கிறது. இது போன்ற நாடகங்களை ஆட வேண்டாம்” என்றார்.
மாநாடு பற்றிக் கருத்து தெரி வித்துள்ள மக்கள் சீனத்தின் வெளியுற வுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “தற்போது அமெரிக்கா நடத்தியுள்ள மாநாட்டிற்கும், சர்வ தேச நீதி அல்லது ஜனநாயகத்திற் கும் தொடர்பில்லை. தனது மேலாதிக்க த்தை தக்க வைத்துக் கொள்ளவும், சுய நலனைப் பாதுகாக்கவும்தான் இது போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. ஜனநாயகம் என்ற பெயரில் ஆயுத மயமாக்கலைதான் அமெரிக்கா உரு வாக்குகிறது” என்று விமர்சித்தார். சீனாவையும், ரஷ்யாவையும் எதிர்கொள்ளவே அமெரிக்கா இதுபோன்ற உத்திகளைக் கையாள்கிறது என்று இருநாடுகளும் குற்றம் சாட்டியுள்ளன. எந்த நாடு களோடு இணைந்து செயல்படுவது என்பதைப் பிற நாடுகள் தேர்வு செய்யும் உரிமையைத் தடை செய் வதே இத்தகைய அணி சேர்க்கையை அமெரிக்கா மேற்கொள்கிறது. தன்னுடைய மேலாண்மையை ஏற்றுக் கொள்ளாத நாடுகளோடு பிற நாடுகள் உறவு வைத்துக் கொள்வ தைத் தடை செய்கிறது என்றும் அமெரிக்காவின் நோக்கத்தை அம்பலப்படுத்தியுள்ளன.
அமெரிக்க மக்கள் எதிர்ப்பு
உண்மையான பிரச்சனைகளி லிருந்து திசைதிருப்பவே ஜோ பைடன் நிர்வாகம் இதுபோன்ற நட வடிக்கைகளில் ஈடுபடுவதாக அமெரிக்கர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இந்த ஜனநாயகத்திற் கான மாநாட்டை எதிர்த்து அமெரி க்காவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.