நரேஷ்குப்தா இ.ஆ.ப மறைவு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
முன்னாள் தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் திரு நரேஷ் குப்தா இ ஆப (72) நேற்று (10.04.2023) காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு வேதனையுற்றோம். தமிழ்நாட்டில் பணியாற்றிய மனிநேயம் நிறைந்த, நேர்மையும், வெளிப்படைத்தன்மையும் கொண்ட அதிகாரிகளில் குறிப்பிடத்தக்கவர் திரு நரேஷ்குப்தா.
சிவகங்கை மாவட்ட ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய அவர், தமிழ்நாட்டின் உள்துறை செயலாளர் மற்றும் தலைமை தேர்தல் அலுவலர் போன்ற தலைமை பொறுப்புகள் வரை உயர்ந்து பணி ஓய்வு பெற்றார்.
திரு நரேஷ் குப்தா பணிக்காலத்தில் பல முன்னுதாரணங்களை உருவாக்கி, முத்திரை பதித்தவர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், நியாயமான, சுதந்திரமாக வாக்குப்பதிவு நடைபெறுவதையும் கறாராகக் கடைபிடித்துச் செயல்படுத்தியவர்.
இணையற்ற பண்பாளர் நரேஷ் குப்தா மறைவு எளிதில் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.