நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழுக் கூட்டம் இன்று (24.02.2022) சென்னை நகரில் உள்ள மாநிலக் கட்சி அலுவலகத்தில் தோழர்.வை.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் திமுகழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
மதவெறியை தூண்டியும், வெறுப்பு அரசியலை பரப்பியும், சமூக மோதல்களை உருவாக்க முனைந்த வலதுசாரி சக்திகளையும், குறிப்பாக பாஜகவையும் பத்தாண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாமல், ஜனநாயக உரிமையை பறித்த அஇஅதிமுகவையும் நிராகரித்த வாக்காளர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக்குழு பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.