தமிழகம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட முடிவு
ஈரோட்டில் நடந்த விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆலோசனை கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளில் போட்டியிடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாவட்டத் தலைவர் பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், ஈரோடு மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவது, மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கெனவே நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு, கணிசமான இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.