தோழர் ப.மாணிக்கம் நூற்றாண்டு விழா!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர்.ப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு விழா 04.03.2023 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது.
நிகழ்வுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். இரா. முத்தரசன் தலைமை தாங்குகிறார். தோழர். கே. சுப்பராயன் எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் நா.பெரியசாமி முன்னாள் எம்.எல்.ஏ. வரவேற்புரை நிகழ்த்துகிறார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா நிகழ்வில் துவக்கவுரை வழங்குகிறார்.
தோழர்.ப.மாணிக்கம் அவர்களின் நூற்றாண்டு மலரினை மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு வெளியிடுகிறார். மலரினைப் பெற்றுக் கொண்டு, தமிழக முதல்வர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் விழாவில் பேருரை ஆற்றுகிறார்.
கீழ்காணும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
திரு. கி. வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
திரு. கே. எஸ். அழகிரி, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ்
திரு. வைகோ எம்.பி. பொதுச் செயலாளர், மதிமுக
தோழர். கே. பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்)
தோழர். தொல். திருமாவளவன் எம்.பி. தலைவர், வி.சி.க.
திரு. கே. எம். காதர்மொய்தீன், தலைவர், இ.தே.மு.லீக்.
திரு. ஜே. ஹெச். ஜவாஹிருல்லா, தலைவர், ம.ம.க.
திரு. ஈ. ஆர். ஈஸ்வரன், தலைவர், கொ.ம.தே.க.
திரு. தி. வேல்முருகன், தலைவர், த.வா.க.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர்.மு.வீரபாண்டியன் நன்றியுரை நிகழ்த்துகிறார்.
இந்நிகழ்வில் கட்சி தோழர்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.