தமிழகம்
தோழர் இரா. முத்தரசன் மருத்துவமனையில் : கோவிட் 19 பாதிப்பு
அன்புமிக்க தோழர்களே, வணக்கம்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் இரா. முத்தரசன் அவர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக கடுமையான சளி, இருமல் இருந்தது.
அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் கோவிட் 19 பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டொரு நாள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மற்றபடி, தோழர் இரா முத்தரசன் உடல்நிலை சீராகவும், இயல்பாகவும் இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
நா பெரியசாமி
மாநிலத் துணைச் செயலாளர்.
23.10.2022