விளையாட்டு
தொடரை கைப்பற்றுமா இந்தியா? நாளை கடைசி டெஸ்ட்
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை ருசித்த நிலையில், 2-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் பெங்களூருவில் சனியன்று (பகலிரவு ஆட்டமாக) தொடங்குகிறது. தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இலங்கை அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் இந்த டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா – இலங்கை
இடம்- சின்னசாமி மைதானம் (பெங்களூரு)
நேரம் : மதியம் 12 மணி