இந்தியா

தேர்தல் நிதி தாரீர்! – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்

அன்பார்ந்த தோழர்களே! நண்பர்களே!

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணை (பிப்ரவரி 7  ஆம் நாள் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று)  அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சாரப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மக்கள் விரோத, பிரிவினைவாத மற்றும் வகுப்புவாத ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கூட்டணியை முறியடிக்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

பா.ஜ.கவிற்கு எதிரான வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதற்காக இதர ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் முற்போக்கு சக்திகளுடன் தேர்தல் உடன்பாடு கண்டிட கட்சியின் மத்திய மற்றும் மாநில தலைமைகள் சீரிய முறையில் முயன்று வருகின்றன. இந்தத் தேர்தல் போராட்டம் ஒரு பெரிய மற்றும் கடுமையான போராட்டமாகும்.

மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு மாற்று அணியை கட்டமைப்பதில் இடதுசாரிகள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது. இது கம்யூனிஸ்டுகளின் வரலாற்று கடமையாகும். இந்தச் சூழலில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதிக்கு தாராளமாகப் பங்களிப்பு செய்யுமாறு கட்சியின் உறுப்பினர்களுக்கும், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் தேசியக் குழு வேண்டுகோள் விடுக்கிறது.

நிதி வசூலை சீரிய முறையில் விரைந்து முடித்து, அவ்வாறு வசூலித்த தேர்தல் நிதியை கட்சியின் தலைமையகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கட்சித் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்தத் தேர்தல் மிக முக்கியமான ஒன்றாகும்.

ஆளும் கட்சிக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளித்து வருவதை நாம் நன்கறிவோம். இந்தத் தேர்தல் களத்தில், சமதளம் என்பது இல்லை. இந்தச் சூழலில், நமது தேர்தல் பிரச்சார செலவிற்கு நிதி உடனடியாகத் தேவைப்படுகிறது.

கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும், அனுதாபியும் அவரவர் நிலைக்குத் தகுந்தவாறு நிதி அனுப்பிட வேண்டும்.

பின்வரும் முகவரிக்கு தங்கள் பங்களிப்பை (காசோலை/வரைவோலை) உடனடியாக அனுப்பவும்:
Communist Party of India, Central Office, Ajoy Bhavan, 15, Indrajit Gupta Marg, New Delhi – 110002.

காசோலை அல்லது வரைவோலை எடுத்து அனுப்புவோர் – “Communist Party of India” —- என்ற பெயரில் எடுத்து அனுப்பவும்.

ஆன்லைன் மூலமாக நிதியளிக்க விரும்புவோர், பின்வரும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பவும்:

வங்கியின் பெயர்: Canara Bank
கிளை: Rouse Avenue, CBSE, New Delhi
Account number: 24171010000036
IFSC Code.: CNRB0012417
——
புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
டி. ராஜா
பொதுச் செயலாளர்   

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button