தேசிய, திராவிட, பொதுவுடைமை அரசியலின் நல்லியல்புகள் அனைத்தையும் ஈர்த்துப் பேருரு எடுத்த பெருமகன் ஜீவா!
புகழஞ்சலி: டி எம் மூர்த்தி
தேசிய, திராவிட, பொதுவுடைமை அரசியலின்
நல்லியல்புகள் அனைத்தையும் ஈர்த்துப்
பேருரு எடுத்த பெருமகன் ஜீவா!
இவர் இல்லாமல் போயிருந்தால்-
பாரதி தெய்வீகக் கவியாகக் குறுக்கப்பட்டிருப்பார்;
கம்பரின் தீந்தமிழ்
நாத்திகர்களுக்கு அந்நியமாகியிருக்கும்;
பொதுவுடைமை என்பது
வெளிநாட்டுத் தத்துவம் என்ற பொய் நிலைநாட்டப் பட்டிருக்கும்!
ஒப்பிடற்கரிய சொற்பொழிவாளராய், ஒடுக்கப்பட்டவர்களின்
இதயத் துடிப்புகளை எடுத்தியம்பிய கவிஞராய்,
தமிழ் இலக்கிய, தமிழர் வாழ்வின் மரபுகளிலிலிருந்து
பொதுவுடைமையைப் போதித்த தத்துவவாதியாய்,
நாட்டின் விடுதலை, மக்கள் நல்வாழ்வு, பகுத்தறிவுச் சிந்தனை,
சாதிய, மதவாதச் சக்திகளைச் சுட்டெரித்தல், தொழிலாளர் உரிமை,
முதலாளித்துவ எதிர்ப்பு, உலகப் பார்வை, மனித நேயம் என
எல்லாமும் எழுதிக் குவித்த எழுத்தாளராய்,
தான் காதலித்த அரசியல் தத்துவத்தின் வாழ்வியல் முன்மாதிரியாக
வாழ்ந்து காட்டிய கம்யூனிஸ்ட்டாய்…
பன்முகத் தோற்றம் கொண்ட தோழர் ஜீவாவின்
திருப் பெயர் நீடூழி வாழ்க!
(தோழர் ஜீவாவின் நினைவு நாள் இன்று 18.01.2023)