துன்பத்தைக் கட்டிச் சுமக்க வழிகாட்டும் வழிகாட்டிகளை நாடு நிராகரிக்க வேண்டும்! – தோழர் கே சுப்பராயன்
தோழர் கே சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து
ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டுத் தப்பிக்கவே முடியாமல் தண்டிக்கப்பட்ட குற்றவாளிக்குப் பெயர் ‘தியாகத் தலைவியா’?
அவரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்திட அரசியல் இயக்கம் நடத்துவோரை என்னவென்று சொல்வது?
‘தியாகத் தலைவி’?யைச் சந்தித்து ஆசியும், அரசியல் ஆலோசனையும் பெற்றவர்கள் மனச்சாட்சியே இல்லாமல் எப்படி நேர்மையாளர்களாக நடிக்க முடிகிறது?
தமிழ்நாட்டின் நலன்களுக்கு நேர் எதிரான கருத்தோட்டம் கொண்ட, தமிழ்ப் பண்பாட்டிற்கு முற்றிலும் எதிரான, மானுட நாகரிகத்தின் பரம விரோதி பாஜகவிற்கு, மராட்டியத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து விட்டு, தமிழ்நாட்டில் தில்லுமுல்லுப் பிரச்சாரம் செய்யும் நேர்மையற்றோரை ஆதரிக்கலாமா?
அரசியல் சாசனத்திற்கு விரோதமாக, உருது, தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகியவற்றைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ்நாட்டவர்களின், உரிமைகளைப் பறிக்கத் தூண்டிவிடுகிற துன்மார்க்க வழியை நாடு ஏற்கலாமா?
துன்பத்தைக் கட்டிச் சுமக்க வழிகாட்டும் வழிகாட்டிகளை நாடு நிராகரிக்க வேண்டும்!