‘திருநெல்வேலி எழுச்சி தினம்’ நினைவேந்தல் நிகழ்வு
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், திருநெல்வேலி மாவட்டக் குழு சார்பில் ‘திருநெல்வேலி எழுச்சி தினம்’ நினைவேந்தல் நிகழ்வு 13-3-2023, திங்கட்கிழமை திருநெல்வேலியில் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக பொருட்காட்சி திடலில் அமைந்துள்ள வ.உ.சி மணிமண்டபத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு பொதுச் செயலாளர் தோழர் மருத்துவர் அறம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருநெல்வேலி எழுச்சியில் உயிரிழந்த தியாகிகள் மற்றும் எழுச்சியில் பங்கு கொண்ட அனைவருக்கும் வீரவணக்கம் முழங்கி அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகில் சொர்ணம் காம்ப்ளக்ஸில் உள்ள சக்தி மினி ஹாலில் நிகழ்வேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பொதுச் செயலாளர் தோழர் மருத்துவர் அறம் தலைமை தாங்கி நடத்தி தலைமை உரை வழங்கினார்.
மாவட்ட செயலாளர் சக்தி வேலாயுதம் வரவேற்புரை நல்கினார்.
திருநெல்வேலி எழுச்சி குறித்து தோழர் நாறும்பூநாதன் நெல்லை மாவட்ட தமுஎகச மாவட்ட தலைவர் உரை நிகழ்த்தினார்.
தோழர் எஸ்.காசி விஸ்வநாதன் எழுதிய ‘1908 முன்னும் பின்னும்’ என்னும் நூலை அறிமுகம் செய்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில செயற்குழு உறுப்பினர் பேராசிரியர் நா.ராமச்சந்திரன் உரை நிகழ்த்தினார்.
நினைவேந்தல் உரையை சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் லட்சுமணன், தமிழ் நலக் கழக செயலாளர் கவிஞர் செல்வமணி,தமிழ்ச்செம்மல் பாமணி, திருநெல்வேலி திருவள்ளுவர் பேரவை கவிஞர் ஜெயபாலன், சுத்தமல்லி திருவள்ளுவர் கழக தலைவர் திரு சொக்கலிங்கம், தமுஎகச மாவட்ட செயலாளர் தோழர் வண்ணமுத்து, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் தோழர் சடையப்பன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஹரிஹரன், காணி நிலம் காலாண்டிதழ் ஆசிரியர் குழு கவிஞர் தானப்பன், பாலை மைய நூலக வாசகர் வட்டம் கவிஞர் கணபதி சுப்ரமணியம், தமிழ்நாடு கலை இலக்கிய மாமன்றம் கவிஞர் ரமணி முருகேஷ், மரியா பெண்கள் கலை அறிவியல் கல்லூரி முனைவர் மஹாலட்சுமி, திரு ஜான் பிரிட்டோ முதலியோர் வழங்கினர்.
இறுதியாக தோழர் காசி விஸ்வநாதன் ஏற்புரை வழங்கினார்.
கவிஞர் பூர்ணா ஏசுதாஸ் NCBH நன்றி உரை வழங்கினார். நிகழ்ச்சியை திரு பிரபு தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் கவிஞர் கணேசன் மக்கள் இசை பாடல்கள் பாடினார்.
இந்நிகழ்வில் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கணபதி சுப்பிரமணியம், தோழர் நவநீதகிருஷ்ணன், திரு.குட்டி, தேரியாயணம் நாவல் ஆசிரியர் கண்ணகுமார விஸ்வரூபன், தூத்துக்குடி பாலு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க, சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வேறெங்கும் காணாத வகையில், மக்கள் தன்னெழுச்சியாக நிகழ்த்திய திருநெல்வேலி எழுச்சியை நினைவுபடுத்தும் விதமாக திருநெல்வேலியில் ஒரு நினைவுச் சின்னம் ஒன்றை தமிழக அரசு அமைக்க வேண்டும் என ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.