தியாக மறவர்களின் பட்டியலில் இடம்பெற்ற நெருப்புமலர்களே, லால்சலாம்! லால்சலாம்! – கே சுப்பராயன் எம்.பி
ஜனவரி-8 சின்னியம்பாளையம் தியாகிகள் நால்வர் தூக்கிலிடப்பட்ட தியாகத் திருநாள்!
சுருக்குக் கயிறு கழுத்தை இறுக்கி உங்கள் மூச்சை நிறுத்துகிறவரை, கம்யூனிஸ்ட் நெஞ்சுறுதியை, நிகரற்ற தியாகத்தை தூக்குக் கயிற்றுக்கும் புரிய வைத்த இரத்தசாட்சிகளே லால் சலாம்!
உலகின் ஐந்து கண்டங்களிலும் வாழ்கிற கோடான கோடி மனிதர்களின் நிறைவாழ்விற்காக, இன்னுயிர் ஈந்த இலட்சோப இலட்சக்கணக்கான தியாக மறவர்களின் பட்டியலில் இடம்பெற்ற நெருப்புமலர்களே, லால்சலாம்! லால்சலாம்!
கம்யூனிஸ்டுகள் குண்டுச் சட்டிக்குதிரைகள் அல்ல, உலக மானுடத்தின் நலம் பேணும் உன்னத மனிதர்கள்!
செங்கொடியே…. உலகெங்கும் எத்தனை தோழர்கள் இரத்தம் சொரிந்தனரோ உந்தன் வேரினிலே!
தியாகிகளின் பெயரால் சங்கற்பம் ஏற்போம்!
மானுட சமுத்திரம் நாமென்று கூவுவோம்! பிரிவிலை! எங்கும் பேதமிலை! உலகம் உண்ண உண்! உடுத்த உடுப்பாய்! புகல்வேன் உடைமை மக்களுக்கு பொது! புவியை நடத்து பொதுவில் நடத்து! வெள்ள அன்பால் இதை குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!