திப்பு சுல்தானை புகழ்ந்து பேசிய ஜனாதிபதியை என்ன சொல்வீர்கள்?
மும்பை, ஜன. 28 – மகாராஷ்டிர மாநிலம் மலாட் விளையாட்டு வளாகத்திற்கு, கடந்த ஜனவரி 26 அன்று விடு தலைப் போராட்ட வீரரும் மைசூரு மன்னருமான திப்பு சுல்தானின் பெயர் சூட்டப்பட்டது. சிவசேனா – காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் ஆகிய கட்சி களைக் கொண்ட, ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி அரசின் இந்த நடவடிக்கை பரவலாக பாராட்டுப் பெற்றாலும், பாஜக, விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் கடு மையாக எதிர்த்தன. “ஒரு நல்ல நாளில் நாட்டில் அமைதியின் மையை உருவாக்கும் முயற்சி” என்று பாஜக எம்எல்ஏ அதுல் பட்கல்கர், விஎச்பி செய்தித் தொடர் பாளர் ஸ்ரீராஜ் நாயர் உள்ளிட்டோர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், பாஜக-வினரின் எதிர்ப்புக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் காட்டமாக பதிலளித்துள்ளார். “குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கர்நாடகா சென்ற போது, திப்பு சுல்தான் ஒரு வரலாற்றுப் போராளி, சுதந்திரப் போராட்ட வீரர் என்று புகழ்ந்தார். எனவே குடியரசு தலைவரின் பதவி விலகலையும் கோருவீர்களா? பாஜக-வினர் இதைத் தெளிவுபடுத்த வேண் டும்” என்று ராவத் கூறியுள்ளார். மேலும், “தில்லியில் வர லாற்றை மாற்ற பாஜக முயற்சி செய்யலாம். ஆனால் அதில் வெற்றி பெற முடியாது. வர லாற்று அறிவு தங்களுக்கு மட்டுமே உள்ளது என்று பாஜக நினைக்கிறது. திப்பு சுல்தானை பற்றி எங்களுக்கு தெரியும். பாஜக-விடம் கற்றுக்கொள்ள தேவையில்லை” என்று கூறியுள் ளார். “பாஜக நடத்துவது ஒரு நாடகம்” என்றும் சாடியுள்ளார்.