தமிழகம்
தமிழ்ப் பண்பாட்டின் சாரமான கருத்து எது? தோழர் கே சுப்பராயன் விடுத்துள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தி
தோழர் கே சுப்பராயன் முகநூல் பதிவில் இருந்து…
தமிழ்ப் பண்பாட்டின் சாரமான கருத்து எது?
சங்க இலக்கியத் தேனடையின் ஞானச் சொட்டு எது?
“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்பதே அது! இதுவே தமிழ்ச் சமூகத்திற்கு நமது தமிழ்த் தந்தையர்கள் வகுத்த ஞானவழி! தமிழ்த் தடத்திலிருந்து தமிழரை, தமிழ்த் தேசியத்தின் பெயரால் தடம் புரட்ட நினைக்கும் தீயசக்திகளின் அரசியல் உள்நோக்கத்திற்கு இரையாகாதே தமிழா!
மத, இன, சாதி, நிறம், மொழி, நாடு, வட்டாரம் என வேற்றுமை வேலிகளைக் கடந்து அன்பை மனிதகுலத்திற்கு அள்ளிக் கொடு தமிழா!
பொங்கலோ பொங்கல்! மகிழ்ச்சியும், சகோதரப் பண்பும், சமாதனமும் உலகெங்கும் தழைக்கட்டும்!
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!