தமிழ்நாட்டில் இரவு நேர, ஞாயிறு பொதுமுடக்கம் ரத்து: முதல்வர் அறிவிப்பு
சென்னை, ஜன.27- தமிழ்நாட்டில் இரவு நேர பொது முடக்கம், ஞாயிறு முழு பொதுமுடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டு, புதிய வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா நோய்த் தடுப்பு நட வடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் தலைமையில் வியாழனன்று (ஜன. 27) ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. இதில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவர்களின் எதிர்காலம், மக்களின் இயல்பு வாழ்க்கை மீள் திரும்புவதற்கு ஏதுவாக, கொரோனா தடுப்பு நட வடிக்கைக்காக விதிக்கப்பட்ட சில கட்டுபாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.
நேரடி வகுப்பு
நிலையான வழிகாட்டு நெறிமுறை களைப் பின்பற்றி பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்படும் கல்லூரிகள் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி வரும் 1ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இதற்கான உரிய முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படு கிறது. இன்று (ஜன. 28) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான பொதுமுடக்கத்தில் இருந்தும், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.30) முழு பொதுமுடக்கத்தில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தொடரும் கட்டுப்பாடுகள்
சமுதாய, கலாச்சார மற்றும் அரசி யல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளி யிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும். மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (எல்கேஜி, யுகேஜி) செயல்பட அனுமதி இல்லை. பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை. அரசு மற்றும் தனியா ரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை. உணவகங்கள், விடுதிகள், அடு மணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். திரு மணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனு மதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வு கள் 50 நபர்களுக்கு மிகாமல் அனு மதிக்கப்படும். துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உரிமை யாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளை யாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையா ளர்களுடனுடம், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடனும், அனைத்து திரையரங்குகளிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 விழுக்காடு பார்வை யாளர்களுடனும் செயல்பட அனு மதிக்கப்படும், உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த லாம். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை. அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பார்வை யாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும். அழகு நிலையங்கள், சலூன்கள் போன்றவை ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கை யாளர்களுடன் செயல்பட அனு மதிக்கப்படும். அனைத்து பொழுது போக்கு, கேளிக்கைப் பூங்காக்கள் நீர் விளையாட்டுகளைத்தவிர்த்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றி 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.