தமிழகம்
தமிழ்நாடு தரவுக் கொள்கை வெளியீடு
தமிழ்நாடு அரசு, திறமையான நிர்வாகம் மற்றும் ஆளுகைக்கு தமிழ்நாடு தரவுக் கொள்கை (Tamilnadu Data Policy) வெளியிட்டுள்ளது. பொது நலனுக்கும், வெளிப்படைத்தன்மைக்கும், அனைத்து துறைகளும் தரவை பயன்படுத்தவதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
தரவு கொள்கையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள: https://tn.gov.in/go_view/dept/17
தரவு பயன்பாட்டை அதிகரித்து, அதை சேகரிக்கும் நேரத்தை குறைத்து, முடிவெடுக்கும் திறன் மற்றும் துறைகளுக்கிடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, வேலை உருவாக்கத்தை பெருக்கி, மக்களின் தரவு தனியுரிமை உரிமைகள் மற்றும் பாதுகாப்பை தரவு கொள்கை உறுதி படுத்த வழிவகை செய்யும்.