என்.சி.பி.எச். புத்தக நிறுவனம் தமிழகம் முழுவதும் 50 இடங்களில் 10% முதல் 50% வரை சிறப்புத் தள்ளுபடி விற்பனை
2022 புத்தாண்டைப் புத்தகங்களுடன் கொண்டாடுவோம். புத்தக வாசிப்பை வளர்த்துவரும் நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் நிறுவனம் புத்தாண்டு கொண்டாட்டத்தை அறிவை வளர்க்கும் விதமாக கடந்த பல ஆண்டுகளாக வாசகர்களுடன் கொண்டாடி வருகிறது. வரும் 2022 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக தமிழகத்தில் 50 இடங்களில் சிறப்புத் தள்ளுபடியுடன் கூடிய புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதி அன்று விடிய விடிய தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி முகக்கவசம் அணிந்தும் மற்றும் சமூக இடைவெளியினை கடைபிடித்தும் இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனை நடைபெறவுள்ளது.
10% முதல் 50% தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக இவ்வாண்டு சுமார் 200 தலைப்பில் அரசியல், பொருளாதரம், தத்துவம், கலை, இலக்கியம், வாழ்வியல், வரலாறு உள்ளிட்ட புதிய புத்தகங்கள் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன.
திரு.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள் எழுதிய மூளைக்குள் சுற்றுலா ரூ.1500 மதிப்புள்ள புத்தகம் சிறப்பு விலையாக ரூ.1000 மற்றும் போட்டித்தேர்வுக்குரிய 38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும் ரூ.1500 மதிப்புள்ள புத்தகம் சிறப்பு விலையாக ரூ.1000க்கு வழங்கப்படுகிறது. எங்களது வெளியீடான அப்துல் கலாம் அவர்களின் நூல்களுக்கு சிறப்புத் தள்ளுபடியாக 30% சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம். கார்ல் மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள், (20 நூல்கள்) பசு. கௌதமன் பெரியார் 5 தொகுதிகள், கம்பராமாயணம், 8தொகுதிகள் தமிழில் மார்க்சிய செவ்வியல் 15 நூல்கள், சென்னை லௌகிக சங்கம் 5 தொகுதிகள் ஆகிய புத்தகங்கள் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம்.
மார்க்சிம் கார்க்கியின் தாய் மற்றும் அவரது நூல்கள் அனைத்தும், ரஷ்ய இலக்கிய நூல்களான போரும் அமைதியும், வீரம் சக்கரவர்த்தி பீட்டர், வரலாற்று நூல்களான முற்கால இந்தியா, நவீனகால இந்தியா, பண்டைக்கால இந்தியா, இந்திய வரலாறு, சோழர்கள், தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளர் நாட்டாரியலாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், எஸ்.வி.ராஜதுரை, அ.கா.பெருமாள், டாக்டர் கு.சிவராமன், ராகுல் சாங்கிருத்யாயன் ஆகியோரின் புத்தகங்கள் 30% சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம். குழந்தைகளுக்கான நெஸ்ட்லிங் புக்ஸ் ஆப் இந்தியா பதிப்பக புத்தகங்கங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம்.
சாகித்ய அகாடெமி வெளியீட்டு நூல்கள் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா பதிப்பக நூல்களுக்கு 20% சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம். தமிழ் இலக்கிய நூல்வரிசைகளான பாவாணர், சாமிசிதம்பரனார், பாரதிதாசன், திரு.வி.க போன்றோரின் நூல்களுக்கு 40% சிறப்புத் தள்ளுபடி வழங்குகிறோம்.
குறிப்பு: ரூ.1000க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு ஜி.யூ. போப் அவர்களின் திருக்குறள் (தமிழ் -ஆங்கிலம்) புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும்.