தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை…
சென்னை:
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்குகனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.
இன்று நீலகிரி, கோவை மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிககனமழையும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் மற்ற மாவட்டங்களில் லேசானமழையும் பெய்யும்.ஆகஸ்ட் 30 ஆம்தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியமாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஒருசில மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதன் காரணமாக மத்தியமேற்கு வங்கக் கடல், அதனையொட் டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.