தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழு ஆய்வு
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து பல்வேறு பகுதிகளில் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பாா்வையிட மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் ஷா்மா தலைமையில் 7 போ் கொண்ட குழு, ஞாயிற்றுக்கிழமை நண்பகல் சென்னை வந்தடைந்தது.
இந்நிலையில், இரண்டு குழுக்களாக பிரிந்து இன்று ஒரு குழுவானது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும், மற்றொரு குழு கன்னியாகுமரிக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகின்றது.
நாளை ஒரு குழு, கடலூா், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா் ஆகிய மாவட்டங்களுக்கும், மற்றொரு குழு வேலூா், ராணிப்பேட்டைக்கும் செல்ல உள்ளது. இந்த குழுக்களை வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி, வருவாய்த் துறை செயலாளா் குமாா் ஜெயந்த் ஆகியோா் ஒருங்கிணைத்துள்ளனர்.
ஆய்வு முடிந்தவுடன் நவ.24 ம் தேதி மத்திய குழுவினா், முதல்வா் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்கிறாா்கள். மத்திய அரசின் ஆய்வுக்குப் பின்னா் தொடா்புடைய குழு அலுவலா்களிடம் கலந்து ஆலோசித்து தமிழகத்தில் ஏற்பட்ட மழை சேத பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமா்ப்பிக்கும்.