தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் மனைவி மறைவுக்கு இரங்கல்!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கோவை கு. ராமகிருஷ்ணன் வாழ்விணையர் வசந்தி தேவி (59) இன்று (20.01.2023) காலை கோவையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றோம்.
மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிராகவும், பகுத்தறிவுக் கருத்துக்களையும் தீவிரமாக பரப்புரை செய்து தோழர் கு.ராமகிருஷ்ணன் பொதுவாழ்வுக்கு பெரிதும் துணை நின்றவர் வசந்தி, அவரது மறைவு பெரும் வேதனையளிக்கிறது.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும், கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.