தந்தை பெரியாரின் நினைவு தினம்: மூத்த தலைவர் இரா நல்லக்கண்ணு மலரஞ்சலி!
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை பின்வருமாறு:
தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகம் பாலன் இல்லம், சென்னை தியாகராய நகரில் இன்று 24.12.2022 காலை 10 மணியளவில் தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு பெரியார் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். நிகழ்வில் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், சென்னை மாவட்டச் செயலாளர்கள் ப.கருணாநிதி, எஸ்.கே.சிவா, த.கு.வெங்கடேஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை தமிழாக்கம் செய்து விடுதலை பத்திரிக்கையில் வெளியிட்டது, சுயமரியாதை மற்றும் சமூக நீதிக்காக பெரியார் பாடுபட்டது, வைக்கத்தில் தந்தை பெரியார், தோழர்.ப.ஜீவானந்தம் இணைந்து போராடியது, நாகை கே.முருகேசன், ஏ.எஸ்.கே.ஐயங்கார் உள்ளிட்ட கட்சி தலைவர்களுடன் பெரியாரின் அரசியல் தொடர்புகள் குறித்தும் நினைவு கூறப்பட்டது.