தமிழகம்

தகர்த்தெறிய முடியாத ஆதிக்க கலாச்சாரம்: நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வேதனை

சென்னை, நவ. 17- சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் ஆதிக்க கலாச்சாரத்தினுள் பணியாற்றி வருவதாக வும் அதனை முழுமையாக தன்னால் தகர்க்க  முடியவில்லை என்றும் சஞ்ஜிப்பானர்ஜி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி  மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.  இந்த முடிவை பரிசீலனை செய்யும்படி பார் கவுன்சிலின் மூத்த வழக்கறிஞர்களும், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பிலும்  கொலீஜியத்திடம் வலியுறுத்தப்பட்டது. சென்னை  உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். எனினும், பணி மாற்றத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கினார். இந்நிலையில், தனக்கு நடைபெறு வதாக இருந்த பிரிவு உபசார விழாவை தவிர்த்த சஞ்ஜிப் பானர்ஜி சாலை மார்க்க மாக கொல்கத்தா புறப்பட்டு சென்றார்.  புறப்படு வதற்கு முன்பு கடிதம் ஒன்றையும் அவர் எழுதி யுள்ளார். அதில் தனிப்பட்ட முறையில் உங்க ளிடம் விடைபெறாமல் செல்வதற்காக மன்னி யுங்கள். என்னுடைய நடவடிக்கைகள் புண்படுத்தி இருந்தால் அது தனிப்பட்ட முறை யில் இல்லை.

அது உயர் நீதிமன்ற நலனுக்கானது மட்டுமே. உங்களின் அளவு கடந்த  அன்பினால் நானும் என் மனைவியும் உள்ளம் மகிழ்ந்தோம் என்று சக நீதிபதிகளுக்கு கூறியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறி ஞர்கள்தான் நாட்டிலேயே சிறப்பானவர்கள் என்று பாராட்டு தெரிவித்துள்ளார் சஞ்ஜிப் பானர்ஜி.  திறமையான நிர்வாகத்தை மேற்கொள்ள உதவி யாக இருந்த பதிவுத்துறைக்கும் நன்றி தெரிவித் துள்ள அவர், இதேபோல் வெளிப்படைத் தன்மையுடன் நடவடிக்கைகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தனக்காக நீண்ட நேரம் காத்திருந்த நீதிமன்ற  ஊழியர்களுக்கு நன்றி கூறியுள்ள சஞ்ஜிப் பானர்ஜி, இதுநாள் வரை ஆதிக்க  கலாச்சாரத்தினுள் பணியாற்றிக் கொண்டிருக் கிறீர்கள். அதை முழுமையாக தகர்த்தெறிய என்னால் இயலவில்லை. இந்த அழகான மாநிலத்தை சேர்ந்த ஒவ்வொருவருக்கும் கடன்பட்டிருக்கிறேன். எனது சொந்த மாநிலம் என 11 மாதங்களாக சொல்லிக் கொண்டிருந்த மகிழ்ச்சியிலேயே உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button